Pages

Friday, February 3, 2017

அண்ணா நினைவு நாள்: அதிரையில் அதிமுகவினர் பேரணி !

அதிராம்பட்டினம், பிப்-03
அதிரையில் அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 48-வது நினைவு நாள் இன்று வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி அதிமுகவினர் அமைதி பேரணி நடத்தினர். பேரணி அதிரை பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி அரசு மகளிர் உயர்நிலைபள்ளி வரை சென்று திரும்பியது. பின்னர் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கு அதிமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் முண்டாசு காதர் தலைமை வகித்தார். அதிரை பேரூர் செயலர் ஏ. பிச்சை, துணைச்செயலர் முகமது தமீம், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைத்தலைவர் எம்.பி அபூபக்கர், செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ், தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சேதுராமன், எம்ஜிஆர் இளைஞர் அணி அதிரை பேரூர் செயலாளர் சிவக்குமார், முன்னாள் கவுன்சிலர் உதயகுமார், மு.க.செ அப்துல் ரஹ்மான், மு.க.செ ரபீக், அஹமது தாகிர், முஹம்மது ஹனீபா, அப்டா தமீம், ஹாஜா பகுரூதீன், யஹ்யாகான், பகுருதீன், அ.மு அப்துல் ஜப்பார், லியாக்கத் அலி, அசோக், காமராஜ், பார்த்தசாரதி, சாகுல்ஹமீது உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...