Pages

Sunday, February 19, 2017

நன்னம்பிக்கை மனிதர் - சிறப்புக் கட்டுரை !

அதிரை நியூஸ்: பிப்-19
பிரோஸ் மெர்ச்சண்ட், இவரைப் பற்றி ஏற்கனவே அதிரை நியூஸில் சுருக்கமாக பகிர்ந்துள்ளோம். கீழ்க்காணும் சுட்டியில் படிக்கவும்..

அமீரகத்தில் சந்தர்ப்பவச சிறைவாசிகளை விடுதலை செய்ய 1 மில்லியன் டாலர் உதவி!

இந்த பதிவின் தலைப்பு நன்நம்பிக்கை வியாபாரி என்றே அமைந்திருக்க வேண்டும் ஏனெனில் அவர் பெயரும் தொழிலும் வியாபாரி என்ற சொல்லை குறிக்கும் Merchant என்ற வார்த்தையாக இயல்பாய் அமைந்துள்ளதே என்றாலும் அவற்றையெல்லாம் விட அவரிடம் மிகைத்திருக்கும் ஈகை பண்பு அவரை 'நன்நம்பிக்கை மனிதர்' (Merchant of Hope) என்றே அழுத்தமாக கூறத்தூண்டுகிறது. சந்தர்ப்பச் சூழலால் நம்பிக்கையிழந்து மறுவாழ்விற்காக சிறைக்குள் போராடி வரும் பல மனிதர்களுக்கும் வெளிச்சம் தரும் விடிவெள்ளி இவர் என்றால் மிகையல்ல.

இந்தியாவின் மும்பை நகரில் ஒற்றை அறை வீட்டில் 8 உடன்பிறப்புக்களுடன் பிறந்த (Firoz Merchant)  பிரோஸ் மெர்ச்சண்ட்டுக்கு (வயது 59) இளம்பிராயத்தில் வறுமையே வரவேற்பளித்ததன் விளைவாய் 11 வயதில் பள்ளிக்கூடத்தை விட்டே விலக வேண்டியிருந்தது. அதேபோல் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் துபைக்கு வேலை தேடி வந்திறங்கியபோதும் சட்டைப்பையில் சல்லிக்காசும் இல்லாதநிலையே.

இன்று கடின உழைப்பால் முன்னேறிய பிரோஸ் மெர்ச்சண்ட் அவர்களுக்கு சுமார் 3.6 பில்லியன் திர்ஹம் மதிப்பில் அமீரகம் உட்பட சுமார் 11 நாடுகளில் 2 நகை தயாரிப்பு தொழிற்கூடங்களும், பியூர் கோல்டு ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் சுமார் 125 சில்லறை நகைக்கடைகளும் அவற்றில் பணிபுரியும் 3,500 ஊழியர்களும் மேலதிகமாக ஆனாலும் அவர் தற்போது தலைப்புச் செய்திகளில் வருவது அவரது மனிதநேய உதவிகளுக்காகவே.

1998 ஆம் ஆண்டு இந்திய துணைத் தூதரகம் மற்றும் துபை அரசு அதிகாரிகள் உதவியுடனும் பொது மன்னிப்பு பெற்ற 350 இந்தியர்கள் நாடு திரும்புவதற்காக தனி சார்ட்டர் விமானத்தையே வாடகைக்கு எடுத்து அனுப்பி உதவியதுடன் துவங்கியது அவரது மனிதநேயப் பணிகள், குறிப்பாக பொருளாதார பிரச்சனைகளின் (Dept Ridden) காரணமாக உதவுவோர் யாருமின்றி சிறைச்சாலைகளில் தவிப்போரின் கடன்களை அடைத்து தாயகம் செல்ல உதவுவதை தனக்குத்தானே கடமையாக்கிக் கொண்டார்.

பிரோஸ் அவர்கள் இதுவரை நாடு, இனம், ஜாதி, மதங்களை கடந்து சுமார் 4,500 பேர் சிறை மீள உதவியுள்ளார், இந்த உதவிகளின் மதிப்பு சுமார் 3 மில்லியன் டாலராகும் (சுமார் 11 மில்லியன் திர்ஹம்). இந்த வருடம் மட்டும் இதுவரை 700 பேரின் கடன்களை அடைத்து உதவியுள்ளதுடன் இம்மாதத்திற்குள் மேலும் 300 பேரின் விடுதலைக்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். மேலும், இந்த வருடத்தில் மட்டும் மொத்தம் 4 மில்லியன் திர்ஹம் நிகர அளவிற்கான உதவிகளைச் செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஒரு மனிதனாக தான் எதற்காக படைக்கப்பட்டோம் என்பதையும் தனக்கு முன்னுள்ள சமூக கடமைகளையும் உணர்ந்து, தமக்கு அல்லாஹ் வழங்கியுள்ள செல்வத்தையும் பயனுள்ள வழியில் செலவிடுவதன் மூலம் 'உதவி பெற்றவர்களின் உள்ளம் நிறைந்த பிரார்த்தனைகள்' நம்மை ஈருலகிலும் வெற்றியடைச் செய்யும் எனக்கூறும் பிரோஸ் அவர்கள், இதுபோன்ற மனிதநேயப் பணிகளை தனக்கு சக்தியுள்ளவரை தொடரப் போவதாகவும் கூறியுள்ளார்.

தனக்கு இத்தகைய தர்ம சிந்தனைகள் தோன்ற,

அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; 'எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்' என்று; நீர் கூறும்: '(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.' (அல் குர்ஆன் 2:215)

என்ற குர்ஆனிய வழிகாட்டுதலுடன் தனது பெற்றோர்களின் குறிப்பாக தாய் தனது ஏழ்மைநிலையிலும் தேவையுடையவருக்கு உதவ வேண்டும் என தொடர்ந்து தனக்கு வலியுறுத்தி வந்ததையும் நினைவுகூறும் பிரோஸ், தான் பொருளாதார ரீதியாக நல்லநிலையில் இருக்கும் போது அதைக்காண தனது தாய் இல்லையே என கலங்கவும் செய்கிறது இவரது இளகிய மனம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...