Pages

Friday, February 3, 2017

செல்லிக்குறிச்சி ஏரி: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் !

அதிராம்பட்டினம், பிப்-03
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், மிலாரிக்காடு, நடுவிக்காடு,
மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு, புதுக்கோட்டை உள்ளூர், மழவேனிற்காடு, காசாங்காடு, மாளியக்காடு, சேண்டாக்கோட்டை, பள்ளிக்கொண்டான், செட்டிக்காடு, முதல்சேரி ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறவும், நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கு வழிவகை செய்யும் வகையில் மகாராஜபுரம் காட்டாற்றில் அணை கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டு பல வருடங்களாக செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், மேலும் நீரேற்றுத்திட்டமும் ( bumping scheme ) கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவருவதாகவும், செல்லிக்குறிச்சி ஏரி தூர் வாருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜாமடம் கிளை வாய்க்கால் கடைமடைப்பகுதி விவசாய பாசனக்குழு சார்பில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் புதுக்கோட்டை உள்ளூர் செல்லிக்குறிச்சி ஏரி அருகே நடைபெற இருப்பதாக அறிவிப்பு செய்து இருந்தனர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சு.ரவிச்சந்திரன் தலைமையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இருதரப்பு அமைதிப்பேச்சுவார்த்தை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நீரேற்றுத்திட்டத்தை ஒரு மாத காலக்கெடுவில் மறுதிட்ட மதிப்பீடு தயார்செய்து அரசிற்கு அனுப்பி வைப்பது, செல்லிக்குறிச்சி ஏரி தூர் வாருதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்ததை அடுத்து நாளை நடைபெற இருந்த ஒருநாள் உண்ணாவிரதப்போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த பேச்சுவார்த்தையில் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.எஸ் வெங்கடாசலம் தலைமையில் வி.எம் நடராஜன், பள்ளிகொண்டான் சுப்ரமணியன், சேண்டாக்கோட்டை மனோகரன, மாளியக்காடு அசோகன், தொக்காளிக்காடு பாலு, மழவேனிற்காடு மல்லிகா மணியர்சர், எம்.எம் கணேசன் உள்ளிட்ட 30 பேர் கலந்துகொண்டனர்.
* File Image

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...