Pages

Sunday, February 5, 2017

பிரிட்டனில் கடல் அலையால் பயங்கரமாக தாக்கப்பட்டும் தப்பிய ரயில் (படங்கள்)

அதிரை நியூஸ்: பிப்-05
தனுஷ்கோடி எனும் தமிழகத்தின் கடைக்கோடி தீவு 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 22க்கும் 23க்கும் இடைபட்ட தேதியில் இரவோடு இரவாக வீசிய கடும் புயலாலும் கடல் அலைகளாலும் முற்றிலும் பாதிக்கப்பட்டு மனிதர் வாழ தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதை அறிவோம். அதே இரவில் அங்கு சென்று கொண்டிருந்த 'போட் மெயில்' (Boat Mail) எனும் ரயிலும் கடல் அலைகளால் தாக்கப்பட்டு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. அன்றைய இரவில் நடந்த சம்பவத்தை பற்றி விவரித்து உலகிற்குச் சொல்ல யாருமே உயிருடன் இல்வாமல் போயினர். தனுஷ்கோடி மக்கள் சந்தித்த அந்த பயங்கரப் பேரழிவு திக்... திக்... நொடிகளை சற்றே உங்கள் மன ஓட்டத்தில் பின்னோக்கி சென்று பாருங்கள்...

குறிப்பு: தனுஷ்கோடியின் வான்வழி தீவுப்படம் ஒரு புரிதலுக்காகவே இங்கு பதியப்பட்டுள்ளது.

இப்போது பிரிட்டன் மக்களும் அதேபோன்றதொரு திக்... திக்... நிமிடங்களை சந்தித்து மீண்டுள்ளனர். பிரிட்டனின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள டவ்லீஸ் நகரில் (Dawlish) எக்ஸடர் மற்றும் பிளைமோத் (Exeter & Plymouth) இடையே செல்லும் ரயிலில் பயணிகள் சென்று கொண்டிருக்கும் போது கடும் காற்றுடன் கூடிய சீற்றமிகு அலை ஒன்று ரயிலை தாக்கியது.

இதற்கு முன்பும் 2014 ஆம் ஆண்டு எழுந்த கடுமையான அலை ஒன்று ரயில்வே பாதையில் பலமாக மோதியதில் ஒரு பக்க ரயில்வே சுவரே காணாமல் போய் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது நினைவு கூறத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...