Pages

Monday, February 6, 2017

டிரம்ப் டிவிட்டர் செய்திக்கு குவைத் அரசு மறுப்பு !

அதிரை நியூஸ்: பிப்-06
இன, மத வெறியன் டிரம்ப் கொண்டு வந்த 7 முஸ்லீம் நாடுகளுக்கான விசா மறுப்புக் சட்டங்களை அமெரிக்க நாட்டு மக்களும், நீதித்துறையும், சொந்தக்கட்சியினரும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில், அரபு நாடான குவைத்திலும் சில முஸ்லீம் நாடுகளுக்கு விசா வழங்க தடை செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகள் 'றெக்கைகட்டி' பறந்ததுடன் பல வெளிநாட்டு செய்தித்தாள்களிலும் வெளியாகின.

இந்நிலையில், உலகின் சக்திவாய்ந்த உளவுத்துறையை கையில் வைத்துள்ள டிரம்ப் சமூக வலைத்தளங்களில் வெளியான பொய்யான செய்திகளின் அடிப்படையில் தனது டிவிட்டர் பக்கத்தில் 'குவைத்தும் டிரம்பின் கொள்கைகளை பின்பற்றுவாதவும், இதை வரவேற்பதாகவும்' மகிழ்ச்சியுடன் வரவேற்றிருந்ததை குவைத் அரசு அடிப்படையற்ற செய்தி என்றும், குவைத்திற்குள் மத, இன பாகுபாடின்றி அனைவரும் வரவேற்கப்படுவதாகவும் தெளிவுபடுத்தி டிரம்பின் முகத்தில் கரியை பூசியுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...