Pages

Thursday, February 2, 2017

அமீரக வானிலை முன்னறிவிப்பு! அதிக குளிர், மழை, பனிமழைக்கு வாய்ப்பு!

அதிரை நியூஸ்: பிப்-02
அமீரகத்தில் தற்போது குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது, இது இன்னும் வலுவடைந்து இன்று வியாழன் முதல் வார இறுதி வரை குளிர் அதிகரிக்கும் என்றும் ராஸ் அல் கைமாவில் அமைந்திருக்கும் சுமார் 1900 மீட்டருக்கு மேலுள்ளதும் அமீரகத்தின் உயரமான சிகரமுமான ஜெபல் அல் ஜைஸ் (Jabal Al Jais) போன்ற மலைப்பிரதேசங்களில் வெண்பனிமழை (Snow fall) சிறிதளவு பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெபல் அல் ஜைஸின் தட்பவெப்ப நிலை 0°Cயிலிருந்து 2°C வரை நிலவும். மேலும் அமீரகத்தின் பல இடங்களிலும் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.

ராஸ் அல் கைமாவில் இதற்கு முன் 2004 ஆம் ஆண்டு 'ராலத் அல் ஜைஸ்' (Ra’alat Al Jais) எனும் மலை சிகரத்திலும், 2009, 2012 ஆம் ஆண்டுகளிலும் ஜெபல் அல் ஜைஸ் சிகரங்களிலும் வெண்பனி (Snow Blanket) போர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...