Pages

Wednesday, February 1, 2017

அதிரையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட சிறப்பு முகாம் ( படங்கள் )

 
அதிராம்பட்டினம், பிப்-01
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4, காதிர் முகைதீன் கல்லூரி நாட்டுநலப்பணி திட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் சேவை அமைப்பு, சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கம், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பு ஆகியோர் இணைந்து திடக்கழிவு மேலாண்மை திட்ட சிறப்பு முகாம் அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு சுற்றுச்சூழல் மன்றம் 90.4 கெளரவத் தலைவர் எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்து இத்திட்டம் குறித்து விளக்கிப் பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன், அதிராம்பட்டினம் காவல்நிலைய ஆய்வாளர் ஏ.டி ஜெயக்குமார், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ.அன்பழகன், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி நிர்வாகத் தலைவர் ஜே.ஏ தாஜுதீன் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

இம்முகாமில் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை முதல் சிஎம்பி லேன் சாலை வி.கே.எம் ஸ்டோர் வரையில் இருபுறமுள்ள குடியிருப்புகளில் சேருகின்ற குப்பை, கூளங்களை அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்களின் உதவியோடு அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் வீடு வீடாகச்சென்று பொதுமக்களிடம் பொதுசுகாதாரத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

இப்பகுதி குப்பைகளை சேகரிக்க குடியிருப்புவாசிகளுக்கு பக்கெட், கேரி பேக் ஆகியன வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இத்திட்டத்தை தன்னார்வ சேவை அமைப்புகள், பொதுமக்கள் ஒத்துழைப்போடு அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக சுற்றுச்சூழல் மன்றம் 90.4 தலைவர் வ. விவேகானந்தம் வரவேற்று பேசினார். அதிரை பண்பலை வானொலி 90.4 நிகழ்ச்சி தயாரிப்புக்குழு தலைவர் பேராசிரியர் செய்யது அகமது கபீர், மேஜர் முனைவர் எஸ்.பி கணபதி, முன்னாள் கவுன்சிலர் இப்ராஹீம், பேராசிரியர் இத்ரீஸ், லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சி இர்பான் சேக், ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடேஷ், காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் எஸ்.சாபிரா பேகம், முனைவர் கே. முத்துக்குமரவேல், முனைவர் எம்.பழனிவேலு, பேராசிரியர் என்.சேகர், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் பொறுப்பாளர் பார்த்தசாரதி, கிரசன்ட் பிளட் டோனர்ஸ் சேவை அமைப்பு அதிரை பேரூர் தலைவர் இப்ராஹீம் அலி, சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கத் தலைவர் அஹமது அனஸ், செயலாளர் முஹம்மது சலீம், மு.க.செ அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டு தூய்மை சேவை திட்டப்  பணிகளில் ஈடுபட்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவச் செய்தியாளர் )

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...