Pages

Thursday, February 2, 2017

ஐரோப்பாவில் பெரும் வரவேற்பை பெற்ற இஸ்லாமிய நிதி பரிவர்த்தனை !

அதிரை நியூஸ்: பிப்-02
உலகெங்கும் வட்டியை அடிப்படையாக வைத்தே நிதித்துறை சுழல்கின்ற வேளையில் அதற்கு நேர்மாறாக இஸ்லாம் கூறும் நிதியமைப்பு லாப, நட்டங்களை மட்டுமே சார்ந்து இயங்குகிறது. இந்த இஸ்லாமிய அடிப்படையிலான நிதிப்பரிவர்த்தனைகள் கிருஸ்தவர்கள் பெரும்பான்மையினராக வாழும் ஐரோப்பாவையும் வெகுவாக கவர்ந்துள்ளதுடன் லாபம் ஈட்டுவதிலும் வளர்ச்சி கண்டு வருகிறது.

உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய அடிப்படையிலான வட்டியில்லா நிதிப்பரிவர்த்தனை அமைப்புக்களின் சொத்துக்களின் மதிப்பு தற்போது 2 டிரில்லியன் டாலர்களாக உள்ள நிலையில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் 3.5 டிரில்லியன்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 3 மில்லியன் முஸ்லீம்கள் வாழும் பிரிட்டனே மேற்குலகிற்கு இஸ்லாமிய நிதித்துறையின் ஐரோப்பிய மையமாக விளங்குகின்றது. பிரிட்டன் 2014 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 200 மில்லியன் யூரோக்கள் (சுமார் 250 மில்லியன் டாலர்) மதிப்புடைய சுகுக் (Sukuk) எனும் நிதிப்பத்திரங்களை (Islamic Bonds) வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் முற்றிலும் இஸ்லாமிய பொருளாதார அடிப்படையில் இயங்கும் அல் ரயான் (Al Rayan Bank) எனும் வங்கிளையும் தன்னகத்தே கொண்டுள்ளது (முன்பு இவ்வங்கி இஸ்லாமிக் பேங்க் ஆஃப் பிரிட்டன் என அழைக்கப்பட்டது)

உலகெங்கிலும் உள்ள சுமார் 622 கல்வியகங்கள் இஸ்லாமிய நிதி பற்றிய படிப்புக்களை நடத்துகின்றன, அதேபோல் 201 கல்வியகங்கள் வட்டியில்லா இஸ்லாமிய நிதிப்பாடங்களில் பட்டங்களை வழங்குகின்றன. இஸ்லாமிய பொருளாதாரத்தை நவீன உலகின் பார்வைக்கு ஏற்றவாறு பயிற்றுவிப்பதற்காகவே FinTech எனும் தொழிற்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஐரோப்பாவில் மட்டும் 109 கல்வியகங்கள் இஸ்லாமிய நிதி சம்பந்தமான படிப்புக்களை சொல்லித்தருகின்ற வேளையில் இதில் சுமார் 63 சதவிகித கல்வியகங்கள் இங்கிலாந்தில் மட்டும் இயங்குவது இஸ்லாமிய நிதி குறித்த ஆர்வத்தை மக்களிடம் பெருமளவில் ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது.

பிரிட்டன் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலகியதை (Brexit Vote) அடுத்து ஏற்படும் நிதிப்பிரச்சனைகளை இஸ்லாமிய நிதிக்கொள்கைகளின் மூலம் நிரப்ப முடியும் என்ற நம்பிக்கை காணப்படுவதுடன் அதற்கான முன்முயற்சிகளும் துவக்கப்பட்டுள்ளன.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...