Pages

Saturday, February 4, 2017

சுழற்றியடித்த கடும் குளிர்க்காற்று, ஐஸ்மழையில் முடங்கிய அமீரகம்! (படங்கள்)

அதிரை நியூஸ்: பிப்-04
அமீரகத்தில் நேற்று (வெள்ளி) நிலவிய மாறுபட்ட சீதோஷ்ண நிலையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சுமார் 70 km/ph லிருந்து 80 கி.மீ வேகத்திற்கு சுழற்றியடித்த புழுதிக்காற்றும் கடுங்குளிரும், சுமார் 15 அடி உயரத்திற்கு எழும்பிய கடல் அலைளும், பல இடங்களிலும் பெய்த மழையும், மலைப்பிராந்தியங்களில் வழமைக்கு மாறாக பொழிந்த ஐஸ் (பனி)மழை என கலந்துகட்டியடிக்க வாரந்திர விடுமுறை நாள் எனும் போதும் பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்குள் முடங்கினர்.

மேலும், ஷின்டாகா டனல் (Shindhaga Tunnel) போன்ற பல சுரங்கப்பாதைகளும் மழைநீரால் சூழப்பட்டிருந்தாலும் போக்குவரத்துக்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அவை உடனுக்குடன் அகற்றப்பட்டன. ஜெபல் அலி, ஷேக் ஜாயித் நெடுஞ்சாலை போன்ற திறந்தவெளி பகுதிகளில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாயினர். பகலிலே ஓர் இரவு என்று வர்ணிக்குமளவுக்கு இருள் சூழ்ந்திருந்தது.

அமீரகத்தின் மிக உயரமான மலையான ராஸ் அல்கைமாவின் ஜெபல் அல் ஜெய்ஸ் (Jabal Al Jais) மலை சிகரத்தில் அமீரக வானிலை மையம் அறிவித்திருந்தபடி பனிமழை (ஐஸ் மழை) (Snowfall) பெய்ததால் போலீஸார் போக்குவரத்தை தடை செய்திருந்தனர். மேலும் இங்கு -2.2C to -0.3C எனும் அளவுக்கு குளிர் நிலவியது. அமீரகத்தின் பிற பகுதிகளில் 12-17C வரை தட்பவெப்ப நிலை நிலவியது. அதேபோல் அல் மப்ராஹ் மலையில்  ( Al Mabrah Mountain) -0.7C வரை தட்பவெப்பம் நிலவியது.

சில இடங்களில் ரம்மியமான இந்தக் குளிர் ரசித்து அனுபவிக்கும் வகையிலும் இருந்தது, எம்மில் பலருக்கும் தங்கும் அறையே ஊட்டி, கொடைக்கானலை கற்பனையில் உணரச் செய்தது.

நேற்றைய சீதோஷ்ண பாதிப்பால் குளோபல் வில்லேஜ் மூடப்பட்டதுடன் சர்வதேச சைக்கிள் பந்தயம், கோல்ப் போட்டிகள் போன்ற பல நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இன்று மாலை (சனிக்கிழமை) முதல் சீதோஷ்ணநிலை சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...