Pages

Tuesday, February 21, 2017

தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் குவைத்தியர்களுக்கு தனி மருத்துவமனை திறப்பு!

அதிரை நியூஸ்: பிப்-21
குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிரான சிந்தனைப் போக்குகள் அதிகரித்து வரும் நிலையில் புதிதாக குவைத்தியர்களுக்கு மட்டுமான சிறப்பு அரசு (ஜாபர்) மருத்துவமனை ஒன்று விரைவில் திறக்கப்படவுள்ளது. 1984 ஆம் ஆண்டுக்குப்பின் அதாவது கடந்த 30 ஆண்டுகளில் முதன்முதலாக திறக்கப்படவுள்ள அரசு மருத்துவமனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத்திற்காக விண்ணைத்தொடும் கட்டிடங்களை எழுப்ப, சாலைகளை பெருக்க, கழிவறைகளை சுத்தப்படுத்த என தேவைப்படும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகளை கூட பாரபட்சமாக மறுப்பது அவர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலே என்ற குரலையும் சில குவைத்தியர்களே எழுப்பி வருகின்றனர்.

சுமார் 304 மில்லியன் குவைத் தினார் (சுமார் 997 மில்லியன் டாலர்) செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஜாபர் மருத்துவமனையை குவைத் நகர்ப்புற பகுதியிலிருந்து சுமார் 20 நிமிட பயணத்தில் சென்றடையலாம். பிற வளைகுடா நாடுகளைப் போலவே குவைத்திலும் அதன் குடிமக்களுக்கு அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை இலவச மருத்துவ வசதிகள், மானியங்கள், வீட்டு வசதியில் சலுகைகள் என பல இலவச சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வெளிநாட்டு தொழிலாளர்கள் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் போது 1 தினார் எனும் அடிப்படை கட்டணம் செலுத்துவதுடன் ஆசிய மற்றும் அரபு பிராந்திய தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் வருடந்தோறும் 50 தினார் மருத்துவ இன்ஷூரன்ஸ் தொகையையும் அரசுக்கு செலுத்தி வருகின்றன. அதேவேளை மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் ஊழியர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும் விசேட வாய்ப்பையும் நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

இத்தகைய பாரபட்ச போக்கைப் பற்றி டாக்டர் யூசுப் அல் முஹன்னா அவர்கள் கூறும் போது, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விசா அனுமதியை வழங்கிய அரசு அவர்களை பாரபட்சமற்ற முறையிலும் நடத்த வேண்டும் என்றும், மருத்துவர்கள் நோயாளிகளின் நோயை மட்டுமே பரிசோதிக்க வேண்டுமே தவிர அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என பாஸ்போர்ட்டை பரிசோதிப்பது முறையல்ல எனக் கூறினார்.

கடந்த வருடமே குவைத்தின் ஜஹ்ரா பிராந்திய அரசு மருத்துவமனைகளும், அல் அமீரி மருத்துவமனையும் காலை வேளைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சிகிச்சையளிக்க மறுத்து மாலையில் மட்டுமே சிகிச்சையளிக்கின்றனர், அவசரகால நிலை தவிர.

அரேபியர் ஒருவர் மேற்கத்திய நாட்டிற்கு அகதியாக செல்லும் போது தன்னை தீவிரவாதியாக கருதாமல் கண்ணியமாக நடத்த வேண்டும் என விரும்புகிறார் ஆனால் வளைகுடா நாடுகள் சில தன்னிடம் உள்ள வெளிநாட்டினர்களை அட்டைப்பூச்சிகளாகவும், ஒட்டுண்ணிகளாகவும் கருதுவது நியாயமா? என காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார் குவைத்வாழ் எகிப்தியர் ஒருவர்.

வெளிநாட்டினருக்கு மற்றுமொரு பேரிடியாக சமீபத்தில், குவைத்தில் 2 வருடம் பணியாற்றியவர்கள் மட்டுமே டிரைவிங் லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க முடியும் மேலும் அவர் 400 தினார் சம்பளம் பெறுபவராகவும் இருத்தல் வேண்டும் எனவும் திருத்தப்பட்ட சட்டம் தெரிவிக்கின்றது. இந்த சட்டத்திலிருந்து மருத்துவர்கள், பேராசிரியர்கள், பத்திரிக்கைகள் மற்றும் எஞ்சினியர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் வைத்திக்கும் சுற்றுலாவாசி மற்றும் மாணவர்கள் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று வாகனங்களை இயக்கலாம். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டி பிடிபட்டால் சிறை நிச்சயம்.

குவைத் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே பெண் எம்.பி ஸபா அல் ஹாஷம் என்பவர் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக விஷம் கக்கி வரும் நிலையில், தொழிலாளர்களுக்கு ஆதரவான எம்.பிக்களும் உள்ளனர். மேலும், பொதுமக்களும் உங்களால் அவர்களை சரிசமமாக நடத்த முடியாவிட்டால் அவர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றிவிட்டு உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என விளாசியுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...