Pages

Friday, February 17, 2017

அதிரையில் பி.எஃப்.ஐ ஒற்றுமை அணிவகுப்பு பேரணி: நேரடி ரிப்போர்ட் ( படங்கள் )

அதிராம்பட்டினம், பிப்-17
இன்று பிப்-17, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உதய தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வலியுறுத்தி, தமிழகத்தில் கோவை, கடையநல்லூர், அதிராம்பட்டினம் ஆகிய 3 இடங்களில்  யுனிட்டி மார்ச் எனும் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்வீரர்களின் சீருடை அணிவகுப்பை அவ்வமைப்பின் மாநிலப் பொருளாளர் வழக்குரைஞர் என்.எம் ஷாஜஹான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணி அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையிலிருந்து புறப்பட்டு சேர்மன் வாடி, இந்தியன் வங்கி, பேருந்துநிலையம், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, பெரிய கடைத்தெரு, ஜாவியா சாலை வழியாக ஈசிஆர் சாலையை கடந்து பள்ளிச்சாலை வழியாக கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடக்க இருக்கும் மாபெரும் பொதுக்கூட்ட மேடையை நோக்கி சென்றடைந்தது. இப்பேரணியில் பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

பேரணி துளிகள்:
1. பேரணி வண்டிப்பேட்டையில் இருந்து சரியாக மாலை 4.20 மணிக்கு புறப்பட்டது.

2. பி.எஃப்.ஐ செயல்வீரர்கள் சீருடை அணிந்து தனித்தனி குழுக்களாக வீதிகளில் கம்பிரமாக அணிவகுத்து சென்றனர்.

3. அணிவகுப்பைக் காண பெண்கள் உட்பட ஏராளமான பார்வையாளர்கள் வழிநெடுக ஒன்று கூடி வரவேற்றனர்.

4."நாரே தக்பீர்", "அல்லாஹ் அக்பர்" முழக்கங்கள் ஆங்காங்கே கேட்க முடிந்தது.

5. பேரணியில் 'வதந்தியை பரப்பாதே', 'ஒற்றுமையை உயர்த்திப்பிடிப்போம்', 'பாசிசத்தை வீழ்த்திடுவோம்' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

6. பேரணியில் பி.எஃப்.ஐ செயல்வீரர்கள் கையில் சுமந்து சென்ற மிக நீளமான பி.எஃப்.ஐ கொடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

7. வழிநெடுக பி.எஃப்.ஐ கொடி தோரணங்களால் அலங்கரிப்பட்டு காணப்பட்டன. ஆங்காங்கே குண்டு குழி சாலைகள் செப்பனிடப்பட்டு காணப்பட்டது.

8. அதிரையின் பிரதான வீதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்த தன்னார்வலர்கள், வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.

9. பேரணியின் போது வாகன நெருக்கடி, சட்ட ஒழுங்கு பிரச்சனை, காதைப் பிளக்கும் வெடிச்சத்தங்கள் ஆகியவை இல்லாமலும், குறித்து நேரத்தில் பேரணி நிறைவுற்றதாலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட ஏராளமான போலீசாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

10. சிறப்பான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினரின் ஒத்துழைப்பு பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...