Pages

Sunday, February 5, 2017

உறைபனியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் விமானம்!

அதிரை நியூஸ்: பிப்-05
சுவிட்சர்லாந்துக்கு சொந்தமான சுவீஸ் ஏர்வேஸ் விமானம் சுமார் 200 பயணிகள் மற்றும் 17 விமான சிப்பந்திகளுடன் ஜூரிச் நகரிலிருந்து அமெரிக்காவின் சன்னி லாஸ் ஏஞ்சல்ஸ் (Sunny Los Angeles) நகருக்கு பறந்து கொண்டிருந்தது. கீரின்லேண்ட் எனப்படும் பனிப்பிரதேசத்திற்கு மேல் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் ஒரு எஞ்சின் பழுதடைந்ததை தொடர்ந்து அருகாமையிலிருந்த குட்டி விமான நிலையமான 'இகாலுயிட்' எனும் பனிபடர்ந்த, கனடாவுக்கு சொந்தமான ஆர்டிக் பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

முற்றிலும் உறைபனி மூடிய இகாலுயிட் (Iqaluit) விமான நிலைய அதிகாரிகள் பயணிகளை ஆசுவாசப்படுத்தும் வண்ணம் மைனஸ் 21 டிகிரியில் (-21 C)  நடுநடுங்க வைக்கும் குளிர் நிறைந்த ஊரை சுற்றிக்காட்ட ஏற்பாடு செய்தனர் என்றாலும் சுவீஸ் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் அனுமதிக்காததால் பயணிகள் விமானத்திற்குள்ளேயே முடங்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக அமெரிக்காவிலிருந்து மாற்று விமானம் கொண்டு வரப்பட்டு பயணிகள் அனைவரும் சன்னி லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டுச் சென்றனர். இகாலுயிட் சுற்றுலா திட்டம் விமான ஜன்னல் வழியாக பார்க்கும் திட்டமாக மாறிப்போனது.

Source: http://news.nationalpost.com/
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...