Pages

Wednesday, February 8, 2017

அரிய நோயால் பாதிக்கப்பட்ட அமீரக, பாகிஸ்தானிய குழந்தைகளுக்கு இந்தியாவில் வெற்றிகரமான சிகிச்சை!

அதிரை நியூஸ்: பிப்-08
Crigler Najjar Syndrome எனப்படும் அரிய நோய் உள்ளவர்களுக்கு ஈரல்களில் GT enzyme எனப்படும் நொதி சுரப்பது பிறப்பு முதலே இருக்காது. இத்தகைய நோய்களுக்கான சிகிச்சை அமீரகத்திலோ பாகிஸ்தானிலோ இல்லை.

13 வயது காலித் முஹம்மது என்ற அமீரக சிறுவனும், 4 வயது அப்துல் அஹத் என்ற பாகிஸ்தானிய சிறுவனும் இத்தகைய அரிய நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டனர் இதனால் இவர்களுடைய மூளையின் செயல்பாடுகளும் கேட்கும் திறனையும் இழக்கும் நிலை ஏற்பட்டதால் உடனே ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர் அல்லது போட்டோதெராபி phototherapy (treatment by the use of special light) என்கிற ஒளிக்கதிர் சிகிச்சையை நாள் ஒன்றுக்கு 14 முதல் 16 மணிநேரம் வரை தினமும் மேற்கொள்ள வேண்டும்.

எனவே, டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காலித் முஹம்மதிற்கு அவனுடைய தந்தையும், அப்துல் அஹதிற்கு அவனுடைய தாயும் குறிப்பிட்டளவு ஈரலை தானமான கொடுத்ததை தொடர்ந்து அவர்களுக்கு ஈரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சைக்குப்பின் போட்டோதெரபி சிகிச்சையை தொடர வேண்டியதில்லை மேலும் அவர்களுடைய ஈரல் தற்போது GT enzyme என்கிற நொதியை தானே சுரக்கின்றதால் சிறுவர்கள் இருவரும் குணமடைந்து வருகின்றனர்.

திறமைமிகு இந்திய மருத்துவதுறைக்கும், மருத்துவர்களுக்கும், குணமடைந்து வரும் சிறுவர்களுக்கும், ஈரலை தானமாக வழங்கிய அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...