Pages

Thursday, February 9, 2017

வேலை வாய்ப்புக்கான வழிகாட்டி கண்காட்சி - கருத்தரங்கம் !

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி வளாகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி இணைந்து நடத்தும் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டி கண்காட்சி கருத்தரங்கம் மற்றும் பான் செக்கர்ஸ் போட்டி தேர்வுகள் பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (09.02.2016) தொடங்கி வைத்தார்.

பயிற்சி மையத்தினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது: 
போட்டித் தேர்வுகளுக்கு நாம் எவ்வாறு தேர்வாக வேண்டும் என்பது ஆங்கில புலமை தேவை என்ற மனப்பான்மை மிக அதிகமாக உள்ளது.  நம்முடைய தாய் மொழியிலேயே போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு நாம் வெற்றி பெறலாம். போட்டி தேர்வுகளில் 1000 இடங்களுக்கு 4 இலட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பிப்பார்கள். அதில் நம்முடைய முதல் போட்டித் தேர்வில் கவனிக்க வேண்டியது முதல்நிலை தேர்வில் பொது அறிவு சம்பந்தமாக கேள்விகள் அதிகமாக இடம் பெறும். அதற்கு நாம் பள்ளிப் பருவத்தில் பயிற்சி அறிவியல், சமூக வரலாறு, கணக்கு போன்றவற்றை முறையாக பயின்று இருந்தாலே போதும்.

இரண்டாவது நிலையில் நேர்காணல் நடைபெறும் பொழுது நாம் பதட்டபடாமல் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சமோஜித புத்தியுடன் பதிலளிக்க வேண்டும்.  நாம் போட்டித் தேர்வுக்கு தயாராகும் போது  ஏனைய போட்டித் தேர்வுகளையும் எழுத வேண்டும். அனைத்து தேர்வுகளை எழுதுவதற்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

தமிழக அரசின் சார்பில் பிற்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின்சார்பாக போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவதற்காக தங்கும் வசதியுடன் பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றது.  பயிற்சி மையத்திற்கு நுழைவுத் தேர்வு வைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றார்கள்.  பயிற்சி மையத்தில் இலவசமாக தங்கும் விடுதி, உணவு, நூலகம் வசதிகள் தமிழக அரசால் செய்து தரப்பட்டுள்ளது.  இதே போல் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திலும் ஒரு பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இவற்றை பயன்படுத்திக் கொண்டு போட்டித் தேர்வில் தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவியர்களுக்கு விடா முயற்சி, கடின உழைப்புத்திறன், தொய்வின்றி உழைக்கும் மானப்பான்மை, நிடுநிலையுடன் பார்க்கும் மன பக்குவம் போன்றவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் பேசினார்.

பின்னர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக  மூலம் தயார் செய்யப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான கையேட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை அவர்கள் வெளியிட உதவி ஆட்சியர் (பயிற்சி) எம்.எஸ்.பிரசாந்த் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

தொடர்ச்சியாக தஞ்சாவூர் உதவி ஆட்சியர் (பயிற்சி) எம்.பிரசர்ந்த “UPSC தேர்வுகள்” பற்றியும், தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் கமாண்டர் வி.கணேசன் அவர்கள் “சீருடைப் பணியில் பெண்கள்” பற்றியும், தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் பொறியாளர் ஜி.இரவீந்திரன் அவர்கள், “சுயதொழில் வாய்ப்புகள்” பற்றியும், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் மு.செல்வகுமார் அவர்கள் “TNPSC தேர்வுகள்” குறித்தும் தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் துணை இயக்குநர் கு.கலைச்செல்வன் அவர்கள் “வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சேவைகள்” குறித்தும் கருத்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வை.சந்திரசேகரன், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி செயலாளர் முதல்வர் முனைவர் விக்டேரியா, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி செயலாளர் முனைவர் மரியம்மாள் மற்றும் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...