Pages

Monday, February 13, 2017

நீர், உணவு, கழிவு ஏதுமின்றி வறண்ட களிமண்ணுக்கு அடியில் வாழும் மீன் ( வீடியோ )

அதிரை நியூஸ்: பிப்-13
நம்பினால் நம்புங்கள் என சில அதிசய நிகழ்வுகளை நம்மிடமே விட்டுவிடுவார்கள் ஆனால் ஏக இறைவனின் அற்புதப் படைப்பில் இதுவும் ஒன்று என நம்புபவர்களுக்கு எதுவும் 'ஜஸ்ட் லைக் தட்' சமாச்சாரமே!

மேற்கு ஆப்பிரிக்காவின் வறண்ட பாலைவன நதிப்படுகையில் காணப்படும் சிறு துளைகளை குறிவைத்து தோண்டினால் பெரிய உருளை கிழங்கு வடிவில் ஒரு பொருள் கிடைக்கிறது, அந்த பொட்டலத்தை பிரித்தால் உள்ளே உயிருடன் 'மேற்கு ஆப்பிரிக்க லங் பிஷ்' (Western Africa Lung Fish) எனப்படும் (விலாங்கு போன்று தோற்றமுடைய) மீன் உள்ளே நீரின்றி, உணவின்றி, கழிவின்றி காற்றை மட்டுமே சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கும். அந்த சுவாசிப்பினால் ஏற்படுபவையே அச்சிறுதுளைகள்.

இந்த மீன்கள் மீண்டும் நதிப்படுகையில் நீர் வரும் வரை சுமார் 3 முதல் 5 ஆண்டுகள் வரை மண்ணுக்கு அடியில் தாக்குப்பிடித்து வாழ்ந்தும், வளர்ந்தும் வரக்கூடியவை. நமக்கு இது ஒரு ஆச்சரிய செய்தியே என்றாலும் விஞ்ஞானிகளை இச்சம்பவம் வேறுவிதமாக சிந்திக்கத் தூண்டியுள்ளது. இந்த மீனுடைய வாழும் தன்மையை ஆராய்ந்து மனிதர்களையும் இதுபோல் பூமியிலும், வான்வெளி ஆராய்ச்சிகளின்  போதும் நீரின்றி, உணவின்றி, கழித்தல் இன்றி வாழச் செய்ய இயலுமா? என ஆராய துவங்கியுள்ளனர்.

3:191. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”

30:8. அவர்கள் தங்களுக்குள்ளே (இது பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை; எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்.

38:27. மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு.

44:38. மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம்படைக்கவில்லை.

Source: Emirates 247 / Daily Star
தமிழில்: நம்ம ஊரான்


2 comments:

  1. இஸ்லாமிய தமிழ் அறிஞர் அஹமது காக்கா அவர்களிடமிருந்து இதுபோன்ற உற்சாக வார்த்தைகளை தொடர்ந்து பெறுவது நேசத்துடன் வழங்கப்படும் உயரிய விருதுகளுக்கு சமமாக கருதுகிறோம்.

    நன்றியுடன்
    நம்ம ஊரான்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...