Pages

Tuesday, February 7, 2017

சீமை கருவேல மரங்கள் ஒழிப்பு: வாட்ஸ்ஆப், முகநூல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுகோள் !

தஞ்சாவூர் ரோட்டரி சங்கம் சார்பில் சீமை கருவேல மரங்கள்
அகற்றுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் நேரில் பார்வையிட்டார். சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவின்படி
தனியார் நிலங்களில் சீமை கருவேல மரங்கள் வளர்ப்போர்
உடனடியாக அகற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் எச்சரிக்கை விடுத்தார். மேலும் வாட்ஸ்ஆப், முகநூல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தஞ்சாவூரில் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (07.02.2017) நேரில் பார்வையிட்டார்.

சீமை கருவேல மரங்கள் அகற்றுவதை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவின்படி சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.  பொது மக்களின் பங்களிப்போடு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளி கல்லூரி நிர்வாகங்கள் ஆகியோர்களுடன் ஒருங்கிணைத்து “அகற்றுவோம் அகற்றுவோம் கருவேல மரங்களை வேரோடு அகற்றுவோம்” என்ற முழக்கத்தோடு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இங்கு தஞ்சாவூர் ரோட்டரி சங்கம் சார்பில் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இதுவரை தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் 4,20,000 சதுர பரப்பளவில் 95 சதவிகித சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. அனைத்து வட்டங்களிலும் கணக்கெடுப்பு பணி மற்றும் அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது.  10.02.2017க்குள் வீட்டு மனை மற்றும் விவசாய நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றாமல் இருந்தால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அகற்றி அதற்கான செலவினத் தொகை இரு மடங்காக வசு10லிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, கிளின் தஞ்சாவூர் மற்றும் பெரியார் பல்கலைகக் கழக மாணவ மாணவியர்கள் இணைந்து தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மாணவ மாணவரியர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாணவ மாணவியர்கள் இப்பணியில் ஈடுபடுவது பாராட்டத்தக்கதாகும்.  நீங்கள் பங்கேற்பது மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் சீமை கருவேல மரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவது குறித்தும் எடுத்துரைக்க வேண்டும்.  வாட்ஸ்ஆப், முகநூல் போன்றவற்றில் சீமை கருவேல மரங்களால் எற்படும் தீமைகள் தொடர்பாக செய்திகள் அதிகம் பகிர்ந்து, இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் போது ரோட்டரி சங்கத் தலைவர் குபேந்திரன், முன்னாள் தலைவர்கள்  டாக்டர் சிங்காரவேலன், கோவிந்தராஜன், திருääசுகுமாறன்ää அறிவானந்தம், செயலாளர் சண்முகம், சீனிவாசபுரம் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பதிவாளர் பன்னீர்செல்வம், டாக்டர் செந்தமிழ் பாண்டியன் மற்றும் பொது மக்கள், மாணவ மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...