Pages

Saturday, February 4, 2017

உலகின் மிக நீண்டதூர கத்தார் ஏர்வேஸ் விமான சேவை துவக்கம் !

அதிரை நியூஸ்: பிப்-04
உலகின் மிக நீண்டதூர, நீண்டநேர விமான சேவையை இன்று துவக்குகிறது கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம். தோஹாவிலிருந்து இடைநில்லாமல் சுமார் '16.20 மணிநேரம் மட்டுமே' பறக்கும் இந்த விமானம் 9,032 மைல்களை அலேக்காக கடந்து நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகர விமான நிலையத்தில் தரையிறங்கும்.

தோஹாவிலிருந்து நாளை ஞாயிறு அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் விமானம் ஆக்லாந்து நேரப்படி திங்கட்கிழமை காலை 7.30 மணியளவில் தரையிறங்கும். பெரும்பாலும் கடற்பரப்பின் மீது பறக்கும் விமானத்தின் ஜன்னல் ஓரப் பயணிகள் காலை நேரத்தில் இலங்கைக்கு மேல் சுமார் 20 நிமிடங்கள் பறக்கும் போது இயற்கையை ரசிக்கலாம். விமானம் ஆக்லாந்தில் தரையிறங்க 3 மணிநேரம் உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் கண்களுக்கு தட்டுப்படும்.

தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்க திட்டமிடப்பட்டுள்ள ஏர் இந்தியாவின் டெல்லி – சான் பரான்ஸிஸ்கோ சேவையே மிக நீண்டதூர சேவையாக கணக்கிடப்பட்டுள்ளது என்றாலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கான 9,529 மைல்களுக்கான சேவையே இதுவரை சாதனையாகும், எரிபொருள் நஷ்டத்தால் இச்சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுத்திவிட்டாலும் மீண்டும் 2018 ஆம் ஆண்டு முதல் புதிய வகை ஏர்பஸ் A350 ரக விமானத்துடன் மீண்டும் போட்டியில் குதிக்கவுள்ளது.

தற்போதுள்ள விமான சேவைகளுடன் கூடுதலாக 2018 ஆம் ஆண்டில் ஆரம்பமாகவுள்ள உலகின் 10 நீண்டதூர விமான சேவைகளின் பட்டியல்: 
1. சிங்கப்பூர் - நியூ யார்க் - 9,529 மைல்கள்
2. தோஹா – ஆக்லாந்து – 9,032 மைல்கள்
3. லண்டன் - பெர்த் - 9,010 மைல்கள்
4. துபை – ஆக்லாந்து – 8,824 மைல்கள்
5. சிங்கப்பூர் - லாஸ் ஏஞ்சல்ஸ் - 8,770 மைல்கள்
6. டல்லாஸ் - சிட்னி – 8,578 மைல்கள்
7. ஜோஹன்னஸ்பர்க் - அட்லாண்டா – 8,439 மைல்கள்
8. சிங்கப்பூர் - சான் பிரான்ஸிஸ்கோ – 8,434 மைல்கள்
9. அபுதாபி – லாஸ் ஏஞ்சல்ஸ் - 8,387 மைல்கள்
10. துபை – லாஸ் ஏஞ்சல்ஸ் - 8,333 மைல்கள்

Source: The Independent / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...