Pages

Wednesday, February 8, 2017

தஞ்சை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்கள் ஆட்சியர் ஆய்வு ! ( படங்கள் )

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சி மற்றும் பூதலூர் வட்டம், பாலையப்பட்டி தெற்கு ஊராட்சியில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அடிப்படை வசதிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (7.2.2017) ஆய்வு மேற்கொண்டார்.

பூதலூர் வட்டம், பாலையப்பட்டி தெற்கு ஊராட்சியில் பாலைய ஏரியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக பாதுகாப்பான இடத்தினையும், அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டார்.  மேலும், பூதலூர் ஊராட்சி அக்ரஹார பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான பகுதிகளை பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளையும், ஆக்ரமிப்புகளையும் அகற்றிடவும் அறிவுறுத்தினார். கால்நடைத்துறை மூலம் பூதலூர் பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு காளை மாடுகளை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ள உத்தரவிட்டார்.  மேலும், ஆம்புலென்ஸ், தீயணைப்பு வாகனம் தடையின்றி செல்லக்கூடிய பாதைகளை கேட்டறிந்தார். ஜல்லிக்கட்டுக்காக கொண்டு வரும் காளை மாடுகள் வரிசையாக கட்டப்படும்  இடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், புனவாசல் செட்டிக்குளம் பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள பகுதியில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வின் போது மாவட்ட காவல் கணிப்பாளர் ஜெ.மகேஷ், துணை காவல் கண்காணிப்பாளர் அரவிந்த மேனன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், கோட்டாட்சியர்கள் சுரேஷ் (தஞ்சாவூர்), கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), கால்நடைத்துறை இணை இயக்குநர் (பொ) ராஜசேகரன், உதவி இயக்குநர் நெடுஞ்செழியன், வட்டாட்சியர்கள் கஜேந்திரன் (பூதலூர்), ரவிச்சந்திரன் (பட்டுக்கோட்டை), பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுரளி, திருமதி.சித்ரா மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...