Pages

Thursday, March 9, 2017

தஞ்சை மாவட்டத்தில் மார்ச் 11ந் தேதி பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம்: பயன்பெற அழைப்பு !

பொதுவிநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும் மக்களின் குறைகளைக்கேட்டு  அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்திடுவதற்கும் வட்டந்தோறும் பொதுவிநியோகத்திட்டம் தொடர்பாக மக்கள்  குறை தீர்க்கும் கூட்டம் (Civil Supplies Grievances Meeting) நடத்திட சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றம் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  மார்ச் 2017  மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 11.03.2017  அன்று  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் கீழ்கண்ட கிராமங்களில்  நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கீழ் குறிப்பிட்ட நாளில் பொதுவிநியோகத்திட்டம் தொடர்பான குறைபாடுகளை ஒவ்வொரு வட்டத்திலும் பின்வரும் கிராமங்களிலுள்ள நியாய விலை அங்காடிகளில் முகாமிட்டிருக்கும் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் இடங்கள்:
1. தஞ்சாவூர்: வளமிரான்கோட்டை
2. திருவையாறு: கண்டியூர் 1
3. ஒரத்தநாடு: மண்டலககோட்டை
4. கும்பகோணம்: விளந்தகண்டம்
5. பாபநாசம்: பூவம்பக்குடி
6. திருவிடைமருதூர்: புழுதிக்குடி
7. பட்டுக்கோட்டை: மடத்திக்காடு
8. பேராவூரணி: செருபாலக்காடு
9. பூதலுர்: ஆவாரம்பட்டி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...