Pages

Tuesday, March 7, 2017

துபாயில் அனுமதியின்றி விற்பனை செய்த 12 டன் பொருட்கள் பறிமுதல் ! 16 வியாபாரிகள் கைது !!

அதிரை நியூஸ்: மார்ச்-7
துபாயின் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் (Labour Camp Area) ஒன்றான அல் முஹைஸ்னா-2ல் அனுமதியில்லாமலும், சுகாதாரமற்ற முறையிலும் வியாபாரம் செய்து வந்த நபர்களிடமிருந்து சுமார் 12 டன் பொருட்களுடன் 16 வியாபாரிகளும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டவைகளில் காய்கறி, பழங்கள், மீன்கள் மற்றும் இதர வகை உணவுப் பொருட்களும் அடக்கம். இவற்றில் பயன்படுத்த தக்கவகையில் உள்ள உணவுப்பொருட்கள் மட்டும் 'தார் அல் பெர்' (Dar Al Ber) எனும் தர்ம ஸ்தாபனம் வழியாக ஏழைகளுக்கு விநியோகிக்கப்படும், எஞ்சியவை புதைக்கப்படும்.

இத்தகைய அனுமதியில்லா மார்கெட்டுகள் தலா 3 முதல் 4 வரை ஜபல் அலி இன்டஸ்ட்ரியல் ஏரியா, அல் கோஸ் மற்றும் முஹைஸ்னா பகுதிகளில் செயல்படுவதாகவும், இவற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையிலான அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என துபை முனிசிபாலிட்டி, துபை போலீஸ் தெரிவித்துள்ளது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...