Pages

Friday, March 3, 2017

சீனாவில் 2 வது குழந்தை பெறும் தம்பதிக்கு அரசு ஊக்கத்தொகை !

அதிரை நியூஸ்: மார்ச்-03
சீனாவில் தான் உலகிலேயே மக்கள் தொகை அதிகம் என்பது பாலர் பாடம். மக்கள் தொகை பெருக்கம் நாட்டில் பஞ்சத்தையும், பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்திவிடும் என சிந்தித்த சீன கம்யூனிச அரசு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கட்டாய ஒரு குழந்தை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தியது ஆனால் ஒவ்வொரு மனிதனும் இறைவன் வழங்கிய சிந்திக்கும் திறனுள்ள, பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் மூளையுடன் பிறக்கிறான் என்பதை மனதளவில் கூட ஒப்புக்கொள்ள மறுத்ததன் விளைவாக முதியவர்கள் அதிகரிப்பு, அனைத்து வகை வேலை வாய்ப்புகளுக்கும் ஊழியர்கள் பற்றாக்குறை, திருமணத்திற்கு சரியான ஜோடி கிடைக்காமை போன்ற பல பக்கவிளைவுகளும் ஏற்பட்டன.

ஒருவழியாக விழித்தெழுந்த சீன அரசு கடந்த வருடம் 2வது குழந்தையை பெற்றுக்கொள்ளுங்கள் என பாக்கு வெத்தலை வைத்து அழைத்தது என்றாலும் அரசு எதிர்பார்த்த அளவில் பெற்றோர்கள் பலர் 2வது குழந்தையை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. காரணம், போதிய வருமானம் இன்மையால் ஏற்பட்ட உள்ளார்ந்த பயம் மற்றும் ஒரு குழந்தை கட்டாய சட்டத்திற்கு 40 ஆண்டுகளாய் பழகிய மனம்.

ஒரு காலத்தில் சீனாவில் 2 வது குழந்தை பெற்றாலே அபராதம் மற்றும் கடும் தண்டனைகளை விதித்த சீன அரசு தற்போது 2 வது குழந்தையை பெற்றுக் கொள்ளும் பெற்றோர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முன்வந்துள்ளது. காலம் படிப்பித்து தந்த பாடம்.

சிந்திக்கும் மக்களைப் பார்த்து அல் குர்ஆன் கூறுகிறது....
அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை; அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான் - இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.(29:60)

இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.(11:6)

'வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை' என்று (நபியே!) நீர் கூறுவீராக: இன்னும் (அல்லாஹ்வுக்கு வழிபடுபவர்களில் முதன்மையானவனாக, இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்) என்று கூறுவீராக. இன்னும் நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம்.(6:14)

இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். எனவே (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்யான கூற்றுக்களையும் விட்டு விலகி விடுவீராக.(6:137)

'வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். (6:151)

நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.(17:31)

Sources: china daily / pressreader.com
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...