Pages

Friday, March 3, 2017

நெடுவாசல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிரை தமுமுக / மமகவினர் 70 பேர் கைது !

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் மாபெரும் மண்ணுரிமை ஆர்ப்பாட்டம் நடத்த அக்கட்சியினர் இன்று நெடுவாசலில் திரண்டனர்.

முன்னதாக இந்த ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ள அதிராம்பட்டினத்தில் இருந்து 3 வேன்களில் அதிராம்பட்டினம் மமக செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது மற்றும் தமுமுக/மமக ஒருங்கிணைந்த அதிரை பேரூர் தலைவர் எம். சாகுல் ஹமீது ஆகியோர் தலைமையில் 70 பேர் புறப்பட்டனர்.  இவர்கள் 70 பேர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து போராட்டதிற்கு திரளாக வருகைதந்த அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...