Pages

Thursday, March 9, 2017

அதிரையில் ADT நடத்திய இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-9
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் ( ADT ) அமைப்பின் சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் தக்வா பள்ளிவாசல் அருகில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு அவ்வமைப்பின் செயலர் ஜமீல் முகமது சாலிகு தலைமை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட
நாச்சியார் கோவில் ரஹ்மத்துல்லா 'நபி வழி என்பது என்ன?' என்ற தலைப்பிலும், நெல்லை மவ்லவி. ஹீசைன் மன்பயீ 'அழிக்கப்பட வேண்டிய அனாச்சாரங்கள்' என்ற தலைப்பிலும் இஸ்லாமிய மார்க்க விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.

தொடக்கத்தில் அதிரை அகமது ஹாஜா வரவேற்றுப் பேசினார். முடிவில் அவ்வமைப்பின் பொருளாளர் மீடியா மேஜிக் நிஜாமுதீன்
நன்றி கூறினார். இக்கூட்டத்தில் பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...