Pages

Thursday, March 9, 2017

அபுதாபியில் தொழிலாளர்களை தரமற்ற சூழலில் தங்க வைக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் !

அதிரை நியூஸ்: மார்ச்-9
அபுதாபியில் குறிப்பாக முஸஃபா இன்டஸ்ட்ரியல் ஏரியா பகுதியில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தங்குமிடங்கள் தரமற்ற முறையிலும், சுகாதார சீர்கேடுகளாலும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் படுக்கைகளுடனும் கேம்புகள் காணப்பட்டால்; அவர்களுக்கு இத்தகைய தங்குமிடங்களை வழங்கிய நிறுவனங்களுக்கு சுமார் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி மாநகராட்சி எச்சரித்துள்ளது. மேலும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதிக்குள் இத்தகைய குறைகள் அனைத்தையும் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற காலக்கெடுவையும் அறிவித்துள்ளது.

அபுதாபி மாநகராட்சி வரையறுத்துள்ளபடி சுற்றுச்சூழல் (Environment), சுகாதாரம் (Health) மற்றும் பாதுகாப்பு (Safety) எனப்படும் EHS அம்சங்களையும் பிரதானமாக ஒவ்வொரு தங்குமிடங்களும் கொண்டிருக்க வேண்டும் இல்லையேல் அத்தகைய கட்டிடங்களை புணரமைப்பதற்கான பணிகளை உடனே துவங்க வேண்டும் என கட்டிட உரிமையாளர்கள் (Property Owners) மற்றும் இத்தகைய சொத்துக்களில் முதலீடுகள் (Investors) செய்துள்ள நிறுவனங்கள் இதற்கான முன்னெடுப்புக்களை துவங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அபுதாபி தீவு, பனியாஸ், வத்பா, ஷம்கா உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடந்த டிசம்பரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளின் போது, பல தொழிலாளர்கள் தரையில் உறங்கியதும், இன்னும் சிலர் இரண்டடுக்கு மூன்றடுக்கு கட்டில்களில் உறங்கியதும், பலர் தங்களுடைய சமையல் பாத்திரங்களை தங்களின் படுக்கைகளுக்குள்ளேயே வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்காக சுமார் 14 நிறுவனங்கள் மீது 3.5 லட்சம் திர்ஹங்கள் வரை அபராதம் விதிக்கப்பட்டன.

அதேபோல் 2016 அக்டோபரில் சஹாமா மற்றும் அபுதாபியின் புறநகர் பகுதிகளில் உள்ள நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்புக்களில் சோதனைகள் நடத்தப்பட்டு சுமார் 8 நிறுவனங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...