Pages

Wednesday, March 8, 2017

துபாயில் டிராம் சேவைகள் நீட்டிப்புக்கான பூர்வாங்க ஆய்வுப்பணிகள் துவக்கம் !

அதிரை நியூஸ்: மார்ச்-8
துபாயில் முதற்கட்டமாக 11 கி.மீ தூரத்திற்கு 11 நிலையங்கள் மற்றும் 11 டிராம் வண்டிகளுடன் அல் சுபோஹ் சாலை (Al Sufouh Road) முதல் துபை மரீனா (Dubai Marina) வழியாக ஜூமைரா பீச் ரெஸிடென்ஸி (Jumeirah Beach Residency) வரையிலான சேவை 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான 2 மற்றும் 3 ஆம் கட்ட சேவை நீட்டிப்புப் பணிகளுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது என்றாலும் மேற்கொண்டு தகவல்களை பகிர மறுத்துவிட்டது. எனவே, இந்த 2 ஆம் கட்ட நீடடிப்புப்பணிகள் சுமார் 5 கிலோ மீட்டருக்குள் ஜூமைரா ஹோட்டல் (Jumeirah Hotel) முதல் மால் ஆப் தி எமிரேட்ஸ் (Mall of the Emirates) மெட்ரோ நிலையம் வரை அமையும் என்றும், இதன்வழி நாளொன்றுக்கு சுமார் 18,000 பயணிகள் பயனுறுவர் எனவும் நம்பப்படுகிறது.

அதேபோல் 3 ஆம் கட்ட நீட்டிப்புப்பணிகள் ஜூமைரா ரோட்டிலிருந்து (Jumeirah Road) '2 டிசம்பர் தெரு' (2nd December Street) வரை இருக்கலாம். மேலும் புதிய 7 நிலையங்களுடன் 14 டிராம் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்படலாம்.

மேலும், 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள துபை எக்ஸ்போ நிகழ்ச்சியை முன்னிட்டு 15 கி.மீ தூரத்திற்கு துபை அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கும், 2020 எக்ஸ்போ நிகழ்வுகள் நடைபெறும் இடத்திற்கும் இடையிலான பணிகளும் வெகு விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த மெட்ரோ நிலையங்களை ரெட் லைன் மெட்ரோ சேவையுடன் இணைக்கும் நிலையங்களாக அல் நகீல் ஹார்பர் (Al Nakheel Harbour) மற்றும் டவர் ஸ்டேசன் (Tower Station) ஆகியவை விழங்கும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...