Pages

Friday, March 17, 2017

பழஞ்சூர் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம் துவக்க விழா பழஞ்சூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

விழாவிற்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் முகாமை தொடங்கி வைத்து பேசுகையில்; 
மறைந்த தேசப் பிதா காந்தியடிகள், அன்னை தெரசா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோர் தாங்கள் ஆற்றிய சேவைகள் மூலம் உலக வரலாற்றில் உயர்ந்த இடத்தை அடைந்தனர். மாணவ, மாணவிகள் சேவையாற்றும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூக தொண்டு ஆற்றும் மாணவ, மாணவிகளிடம் உண்மை, உழைப்பு, பணிவு ஆகிய பண்புகள் அமைந்து இருந்தால் நிச்சயம் உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும்' என்றார்.

முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் பி. சிலார் முகமது, தேசிய மாணவர் படை அலுவலர் மேஜர் டாக்டர் எஸ்.பி கணபதி, உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

முகாமில் பழஞ்சூர் ஊராட்சி கிராமங்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் தூய்மை பணி, சீமை கருவேல மரங்கள் அகற்றுதல், நீர்நிலை வாய்க்கால் சீரமைப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.

முகாம் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடங்கி வரும் மார்ச் 23ந் தேதி வரை நடைபெறும். முகாம் ஏற்பாட்டினை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் கே. முத்துகுமாரவேல், எம் பழனிவேல், எஸ். சாபிரா பேகம், என்.சேகர் ஆகியோர் செய்தனர்.

முகாமில் பள்ளி ஆசிரியர் ஜி.அருள், வீரப்பன், பழஞ்சூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர். உலக நாதன், ஆர்.வி பாஸ்கர், குமரேசன் உட்பட கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...