Pages

Monday, March 6, 2017

ஏர் இந்தியா விமானத்தை முழுவதும் பெண்கள் மட்டும் இயக்கி கின்னஸ் சாதனை !

அதிரை நியூஸ்: மார்ச்-6
எதிர்வரும் புதன் அன்று கொண்டாடப்படவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முழுவதும் பெண்களால் மட்டுமே இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. புது டெல்லி விமான நிலையத்திலிருந்து பசிபிக் மகா சமுத்திரம் (Pacific Ocean) வழியாக அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகருக்குப் பறந்த இவ்விமானத்தின் விமானிகள், விமான பணியாளர்கள் மட்டுமல்ல இவ்விமான பயணத்துடன் தொடர்புடைய செக் இன் கவுண்டர் (Check - in Counter Staffs), கிரவுண்ட் ஸ்டாஃப்ஸ் (Ground Staffs), ஏர் டிராபிக் கண்ட்ரோலர் (Air Traffic Controller) என அனைத்தும் பெண்களால் முழுவதுமாக பெண்களால் மட்டுமே இயக்கப்பட்டன.

அதேபோல் அட்லாண்டிக் மகா சமுத்திரத்திற்கு மேல் பறந்து சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து புது டெல்லி திரும்பியதன் மூலம் முழுவதும் பெண்களால் இயக்கப்பட்டு உலகை சுற்றிய விமானம் என்ற பெருமையை பெற்றது.

சாதனை பயணம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் அப்பு! ஏர் இந்தியா நிர்வாகத்தை சீரமைத்து, ஏர் இந்திய விமானங்களை கடைசி நேரங்களில் ரத்து செய்யும் போக்கை நிறுத்தி, தேவையற்ற இலவச பயணங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கான வெட்டி சலுகைகளை குறைத்தும் லாபத்தோடு எப்போது இயக்கப் போகிறீர்கள்? அல்லது மறுபடியும் தனியார் நிறுவனமாக மற்றும் திட்டம் ஏதுமுள்ளதா?

பெண்கள் இயக்கியதாலோ, ஆண் அல்லது மூன்றாம் பாலினத்தவர் இயக்குவதோலோ இந்திய நாட்டிற்கோ அல்லது ஏர் இந்தியா நிறுவனத்திற்கோ நயா பைசா புண்ணியமில்லை. மொட்டை குடத்திலிருந்து ஏனிந்த சத்தம்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...