Pages

Tuesday, March 7, 2017

சிட்னியில் மரத்தில் தொங்கியவாறு இரையை விழுங்கிய மலைப்பாம்பு !

அதிரை நியூஸ்: மார்ச்-7
ஆஸ்திரேலியா, சிட்னியின் புகழ்பெற்ற கடற்கரை பிரதேச ஸ்தலங்களில் ஒன்று பைரோன் பே (Byron Bay). இங்கு வனம் சூழ்ந்த இந்தப்பகுதியில் சுமார் 10 அடிக்கு மேல் வளரும் கம்பள மலைப்பாம்புகள் எனப்படும் கார்பெட் பைத்தான்கள் (Carpet Pythons) அதிகம், இவை விஷம் அற்றவை என்றாலும் பற்களுடையவை. இவை தன் தலையைவிட 7 மடங்கு பெரிய இரையையும் கசக்கி பிழிந்து அசால்டாக உள்ளே தள்ளும்.

அதேபோல் போசம் (Possum) எனப்படும் ஒருவகை மிருகமும் இங்கு அதிகம், இவற்றின் வயிற்றிலும் கங்காருவைப் போல் குட்டியை வளர்க்க சிறுதொட்டில் இருக்கும். ஐஸ் ஏஜ் (ICE AGE) என்ற குழந்தைகளுக்கான ஆங்கில தொடர் சினிமாவில் காமெடி கதாபாத்திரமாக வரும் (சிட்னி நகரின் சுருக்கமாக) சிட் (SID) என்ற பெயரில் அழைக்கப்படும் அதே மிருகம் தான்.

பொதுவாக மலைப்பாம்புகள் தரையிலிருந்தபடியே வேட்டையாடும் ஆனால் இந்த கார்பெட் மலைப்பாம்பு மரத்தில் தொங்கிய நிலையில் போசம் என்ற அந்த மிருகத்தை முழுமையாக 15 நிமிடங்களில் விழுங்கி விட்டு அடுத்த வேலையை பார்க்கச் சென்றுவிட்டது.

இந்தக் காட்சிகளை படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த மிஷல்லி ஹூன்ஜாக் என்ற சிட்னி பெண் ஆஸ்திரேலியாவின் சேனல் 9 டிவியில் பேட்டி தரும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார்.

அதேபோல், கார்பெட் வகை மலைப்பாம்பு ஒன்று குயின்ஸ்லாந்தில் 2014 ஆம் ஆண்டும் முதலை ஒன்றுடன் சுமார் 5 மணிநேரம் போராடி விழுங்கியுள்ளது.

Source: The Telegraph / Msn
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...