Pages

Thursday, March 16, 2017

அதிரை அருகே நகை பணம் திருட்டு ( படங்கள் )

பேராவூரணி மார்ச்.16-
அதிராம்பட்டினம் அருகேயுள்ள ரெண்டாம்புளிக்காடு செட்டித்தெரு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52) இவர் பட்டுக்கோட்டையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராணி (வயது 48) பேராவூரணி வேளாண் அலுவலகத்தில் உதவி இயக்குநராக வேலை செய்து வருகிறார்.

புதன்கிழமையன்று பகல் தபால்நிலையத்தில் இருந்து எடுத்து வந்த ரெக்கரிங் டெபாசிட் பணம் ரூபாய் 3 இலட்சத்து 69 ஆயிரத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்துப் பூட்டி விட்டு, ரவிச்சந்திரன் தஞ்சாவூரில் அலுவலக வேலையாகச் சென்றுவிட்டார். ராணியும் அலுவலகத்திற்கு சென்று விட்டாராம்.

இந்நிலையில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரவிச்சந்திரன் மறைத்து வைத்துச் சென்ற பீரோ சாவியை, எடுத்து பீரோவை திறந்து வங்கியில் இருந்து எடுத்து வந்து வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ 3 இலட்சத்து 69 ஆயிரம், ஏற்கனவே இருந்த இருப்பு ரூபாய் 15 ஆயிரத்து 250 ஆக மொத்தம் 3 இலட்சத்து 84 ஆயிரத்து 250 மற்றும் 30 பவுன் தங்க நகை ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

திருடு போன நகை மற்றும் ரொக்கப்பணத்தின் மதிப்பு ரூ 10 இலட்சம் எனக் கூறப்படுகிறது. மாலை பணி முடிந்து வீடு திரும்பிய ரவிச்சந்திரன் தம்பதியினர் வீட்டின் கதவை திறக்க முயன்ற போது உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து, பின்பக்கம் சென்று பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பி.அரவிந்த் மேனன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். கைரேகை நிபுணர் கலைக்கண்ணகி தடயங்களை பதிவு செய்தார். தஞ்சையிலிருந்து கொண்டு வரப்பட்ட மோப்பநாய் ராஜராஜன் மோப்பம் பிடித்தவாறு சுமார் 1 கி.மீ தூரம் ஓடி சாலைச் சந்திப்பில் போய் நின்று கொண்டது.

காமன் பண்டிகையையொட்டி திருட்டு நடந்த வீட்டின் முன் கோயிலில் கட்டப்பட்டிருந்த ஒலி பெருக்கி சப்தத்தில், வீட்டின் கதவை உள்பக்கமாகப் பூட்டியபடி பட்டப்பகலில் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றது இப்பகுதியில் மிகுந்த பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...