Pages

Monday, March 6, 2017

இந்திய ஆசிரியரின் இதயம் அமீரக இளம் பெண்ணுக்கு பொருத்தம் !

அதிரை நியூஸ்: மார்ச்-6
குஜராத் மாநிலம் சூரத் நகரில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியர் ஒருவரின் இதயம் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது அமீரக இளம்பெண்ணுக்கும், கிட்னிகள் அஹமதாபாத்தை சேர்ந்த இருநபர்களுக்கும் பொருத்தப்பட்டதன் மூலம் 3 உயிர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

பாரிமால் பாரிமல் முல்ஜிபாய் பகத் (Parimal Parimal Muljibhai Bhagat) என்கிற சூரத் மாநகராட்சியின் 43 வயது பள்ளிக்கூட ஆசிரியர் திடீர் என சுகவீனமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவர் கடந்த மார்ச் 3 ஆம் தேதியன்று மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அறிவித்ததை தொடர்ந்து அவரது மனைவியிடம் சம்மதம் பெற்று அவருடைய இதயமும், 2 கிட்னிகளும் 3 பேருக்குப் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

சென்னை மலர் மருத்துவமனையில் (Chennai's Fortis Malar Hospital) இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 14 வயது அமீரக இளம்பெண் கதீஜா அவர்களுக்கு சுமார் 1,615 கிலோமீட்டர் தூரத்திலிருந்து சுமார் 155 நிமிடத்தில் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டது.

அஹமதாபாத் கிட்னி ஆராய்ச்சி மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 2 பேருக்கும் ஆசிரியர் பகத்தின் கிட்னிகள் பொருத்தப்பட்டன.

குஜராத்தில் நல்லிதயங்களும் நிரம்பவுள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது இந்நிகழ்வு.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...