Pages

Wednesday, March 15, 2017

அதிரையின் பிரதான சாலையில் உடைந்த கழிவு நீர் வடிகாலை சீர்செய்ய கோரிக்கை !

அதிராம்பட்டினம், மார்ச்-15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் 13 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியின் சாலையில் பழுதடைந்த கழிவு நீர் வடிகாலை சீர்செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில்; அதிராம்பட்டினம், நடுத்தெரு ஈபி மாடல்  நர்சரி & பிரைமரி பள்ளிக்கூடம் அருகே உள்ள பிரதான சாலையில் உள்ள கழிவு நீர் வடிகால் மேல்பகுதி உடைந்து கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசிகிறது. இதனால் இச்சாலையில் கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் இச்சாலையை கடந்து செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகிறது. பழுதடைந்த கழிவு நீர் வடிகாலை சம்பந்தப்பட்ட அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்தினர் உடனடியாக சீர்செய்து தர வேண்டும்' என்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...