Pages

Tuesday, March 7, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் அனைத்து கல்லூரிகள் பங்கேற்ற இலக்கியப் போட்டிகள் !

அதிராம்பட்டினம், மார்ச்-7
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கலை மற்றும் நுண்கலைக்குழுவின் சார்பில் அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இலக்கியப் போட்டிகள் கல்லூரி கலையரங்கில் திங்கட்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமையேற்று
போட்டிகளை தொடங்கிவைத்தார். கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் அ. கலீல் ரஹ்மான் வரவேற்றுப் பேசினார்.

கல்லூரி முன்னாள் முதல்வர் எம்.ஏ முகமது அப்துல் காதர், கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் ஏ. முகம்மது முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

'இளைஞர்களின் எழுச்சி' என்ற தலைப்பில் 5 நிமிட கால அவகாசம் வழங்கி நடத்தப்பட்ட போட்டியில் கல்லூரி தமிழ்துறைத் தலைவர் முனைவர் அ. கலீல் ரஹ்மான், பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர், பேராசிரியை சாபிரா பேகம் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இப்போட்டியில் 25 கல்லூரிகளைச் சேர்ந்த 50 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

போட்டி முடிவில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர் தமிழ் பாரதன் முதல் இடத்தையும்,  'பெண்மைக்குள் பூகம்பம்'  என்ற தலைப்பில் நடந்த கவிதைப் போட்டியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி ச. பிருந்தா முதல் இடத்தையும் பெற்றனர்.

முன்னதாக போட்டிகளின் விதிமுறைகளை கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் எடுத்துரைத்தார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பேராசிரியை சாபிரா பேகம் தொகுத்து வழங்கினார். முடிவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே.நீலகண்டன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக உதவியாளர்கள், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...