Pages

Saturday, March 4, 2017

அதிரையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் புதிய பள்ளிக்கூடம் !

அதிராம்பட்டினம், மார்ச்-04
இஸ்லாமிய சிறுவர், சிறுமிகளுக்கான பிரத்தியோக கல்வியகம் 'இக்ரா இன்டர்நேஷனல் இஸ்லாமிக் ஸ்கூல் & மக்தப்' நடப்பு கல்வியாண்டு முதல்
அதிராம்பட்டினத்தில் தொடங்கப்பட்டு வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று
வருகின்றது.

மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு முன்னோடியாகத் திகழ்ந்துவரும் ‘இக்ரா’ என்ற முஸ்லிம் சிறார் பள்ளிக்கூடம், பெங்களூரு, ஹைதராபாத், சென்னை ஆகிய முக்கிய நகரங்களைத்  தென்னகக் கிளைகளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

சென்ற கல்வியாண்டு முதல் எளிமையாக அதிராம்பட்டினத்திலும் கோயம்புத்தூரிலும் தொடங்கப்பெற்று, அண்மையில் நமதூரில் அதன் ஆண்டுவிழா Richway Garden Restaurant ல் நடைபெற்றது.  அந்நிகழ்ச்சியில் திரளான அதிரைப் பெற்றோர்கள் கலந்துகொண்டு, மாணவ, மாணவியரின் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.

எதிர்வரும் கல்வியாண்டுக்காகத் தற்போது, ‘நர்சரி’ முதல் மூன்றாம் வகுப்பு வரைக்கான ‘அட்மிஷன்’ நடந்துவருகின்றது.
இப்பள்ளிக்கூடத்தின் சிறப்பம்சங்கள்:
NIOS அங்கீகாரம் பெற்றது.
CBSE பாடத் திட்டம்.
ஏழாம் வகுப்புமுதல், இன்ஷா அல்லாஹ், State Board ‘செலபஸ்’.
‘குர்ஆன்’ ஓதல் பயிற்சியும், முதல் வகுப்பிலிருந்து குர்ஆன் மனனப் பயிற்சியும் சிறப்பாக போதிக்கப்படுகின்றது.
‘ஹதீஸ்’, ‘துஆ’, ‘தஜ்வீத்’ முதலிய பாடங்களும் பயிற்றுவிக்கப்படும்.
மற்றும், வழக்கமான ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல் முதலிய பாடங்களும் கற்பிக்கப்படும்.

முக்கியக் குறிப்பு:
இப்பள்ளியில் பணி புரிய ‘ஆலிமா’ பட்டம் பெற்றுச் சான்றிதழை உடைய பெண் ஆசிரியை தேவை.
Married Male Admin ம் தேவை.

தகுதியானவர்கள், கீழ்க்காணும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்: 9500857679. 
தற்போதைய முகவரி:
11/1, சுப்ரமணியர் கோவில் தெரு,               
(பழஞ்செட்டித்தெரு )
அதிராம்பட்டினம்.
Email: info@iqraschool.co  
Website: www.iqrainternationalschool.com

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...