Pages

Tuesday, March 7, 2017

மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து அதிரை பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் !

அதிராம்பட்டினம், மார்ச்-7
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் பி.கே.பிரிட்ஸோ  சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீனவர் அணி சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்ட மீனவர்கள் சங்க செயலாளர் என். காளிதாஸ் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஏ.எம் மார்க்ஸ். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலளார் வி. ராமாலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரை பேரூர் இளைஞர் அணி செயலர் ஹாஜா முகைதீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். முடிவில் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் க. பிச்சைமுத்து நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முகமது இக்பால், பஷீர், பன்னீர் செல்வம், அப்துல் வஹாம், நிஜாம், பால கங்காதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...