Pages

Monday, March 6, 2017

துபாயில் இஸ்லாமிய மார்க்கம் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் கைது !

அதிரை நியூஸ்: மார்ச்-6
முகநூல் (Facebook) வழியாக இஸ்லாமிய மார்க்கம் குறித்தும், உயிரினும் மேலான கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) குறித்தும் அவதூறு பதிவுகளை பதிந்துவந்த 31 வயதுடைய இந்திய நபர் தப்பிச் செல்லும் போது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபையில் எலக்ட்ரானிக் வெல்டராக பணியாற்றி வந்த இந்த நபர் தனது மொபைலின் வழியாக அவதூறான, அசிங்கமான பதிவுகளை தொடர்ந்து பதிவேற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த நவம்பர் 6 ஆம் தேதி இறுதியாக அவமதிப்பு பதிவுகளை பதிவேற்றிய பின் நவம்பர் 7 ஆம் தேதி நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயன்றபோது துபை விமான நிலையத்தில் பிடிபட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்.

அவரது மொபைலை சோதித்த வகையில் அவரது பழைய பதிவுகளை அழித்துள்ளார் என்றாலும் 2016 நவம்பர் 6 ஆம் தேதிய பதிவும், ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்ட முந்தைய பதிவுகளும், அவருடைய மொபைல் வேறு யாராலும் ஹேக் செய்யப்படவில்லை என்ற தொழில்நுட்ப ஆதாரங்களும் அவருக்கு எதிரான போதிய சாட்சியங்களாக அமைந்துள்ளன. இந்த வழக்கின் மறுவிசாரணை எதிர்வரும் மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...