Pages

Saturday, March 11, 2017

பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் கிரிசலைஸ் தினம் கொண்டாட்டம் !

அதிராம்பட்டினம், மார்ச்-11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஈசி வித்யா என்ற கணினி நிறுவனத்தின் சார்பில் கிரிசலைஸ் தினம் ( chrysalis day ) சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளித் தாளாளர் வீ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கணினித் துறை பேராசிரியர்  டாக்டர். ஏ. சேக் அப்துல் காதர், விரிவுரையாளர் எம்.திருநாவுகரசர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

பள்ளியில் பயிலும் மாணவர்கள் பல திட்ட செயல்முறைகளும் பல கணினி மொழிகளையும் கையாண்டு சிறப்பாக விளக்கமளித்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். மாணவர்களின் கணினிச் செயல்திறனை ஏராளமான பெற்றோர்கள் கலந்துகொண்டு வியந்து பாராட்டினர். பள்ளியின் முதல்வர் ஆர்.ஈஸ்வரன் அவர்கள் மாணவர்களை பாராட்டினார்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கணினித் துறை ஆசிரியர்கள் சரளா தேவி இ பவித்ரா மற்றும் மேலாளர் எஸ்.சுப்பையன் ஆகியோர் செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...