Pages

Friday, March 3, 2017

அதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ் வழங்கும் விழா ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-03
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் பெண்களின் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் நடந்து வரும் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோருக்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்று வெள்ளிக்கிழமை மாலை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, ஒருங்கிணைப்பாளர் முஹம்மது முகைதீன், பொருளாளர் ஓ.கே.எம் ஷிஃபகத்துல்லா, பயிற்சியாளர் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக அதிரை பைத்துல்மால் துணைப்பொருளாளர் முஹம்மது இப்ராஹீம் அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் துணைப் பொருளாளர் அப்துல் மாலிக் நன்றி கூறினார்.

அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் பெண்களின் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் பெண்களுக்கு 6 மாத கால தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள், வீட்டில் ஓய்வில் உள்ள பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் முதல் பயிற்சியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற 31 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டன. இவ்விழாவில் அதிராம்பட்டினம் பைத்துல்மால் நிர்வாகிகள், பயிற்சி வகுப்பில் பங்குபெற்ற பெண்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...