Pages

Sunday, March 5, 2017

ஐரோப்பாவில் வெளிர் பச்சை நிறமாக மாறிய நதி நீர் !

அதிரை நியூஸ்: மார்ச்-5
ஐரோப்பா கண்டத்தின் 6 வது மிகச்சிறிய குட்டி நாடு அண்டோரா (Andorra). இது ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் இடையே உள்ள பைரினீஸ் (Pyrenees) மலைத்தொடரில் 468 கி.மீ சுற்றளவுடன் சுமார் 85,000 பேர்களை மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட நாடு. இந்த அண்டோரா மற்றும் ஸ்பெயின் எல்லைகளின் ஊடே பாயும் நதி பெயர் 'கிரேன் வலீறா ஆறு' (Gran Valira River) என்பதாகும். இந்த ஆற்று நீர் தான் திடீரென ஒளிரும் வெளிர் பச்சை நிறமாக (Fluorescent bright green) மாறி மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அண்டோரா குறித்து சில தகவல்கள்: 
988 முதல் தனி நாடாக இயங்கி வருகிறது என்றாலும் 1993 ஆம் ஆண்டு தான் ஐ.நா சபையில் உறுப்பு நாடாகியது. 1278 ஆம் ஆண்டு முதல் இறையாண்மை மிக்க நாடாக அங்கீகரிக்கப்பட்டு அதன் ஆட்சியாளர் தொடர்ச்சியால் நிர்வகிக்கப்படுகிறது.

இது சுய ஆட்சியுரிமை பெற்ற சுதந்திர நாடு, இது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணையாவிட்டாலும் இதன் தேசிய பணமாக 'யூரோ'க்களே (Euro) பரிமாற்றத்தில் உள்ளன.

இந்த நாட்டின் மொழி 'கட்டலான்' (Catalan) என்பதாகும் என்றாலும் மேலதிகமாக ஸ்பானீஷ், பிரேஞ்சு, போர்ச்சுகீஸ் ஆகிய மொழிகளையும் பேசக்கூடியவர்கள்.

இந்த நாட்டிற்கு ஆண்டொன்றுக்கு சுமார் 10.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

முஸ்லீம்களின் ஆட்சியின் கீழ் ஸ்பெயின் உள்ளிட்ட 'ஐபீரியன் வளைகுடா' (Iberian Peninsula) பகுதிகள் இருந்த போது அண்டோராவும் அதில் ஒரு அங்கம், அவர்களே இப்பெயரை சூட்டியிருக்கலாம்.

இதன் அழகிய செறிந்த வனம் மற்றும் பனிமழை பிரதேசங்களால் ஈர்க்கப்பட்ட மூர் எனப்படும் அரேபிய முஸ்லீம் ஆட்சியாளர்களால் முத்தை (Pearl) குறிக்கப் பயன்படும் வார்த்தையான அல் துர்ரா (Al Dhurra) என்ற பெயரே மருவி அண்டோரா என ஆகிய இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

வரலாறு நெடுக பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற அண்டை நாடுகளால் பல போர்களையும், ஆக்கிரமிப்புகளை சந்தித்துள்ள அண்டோரா இன்றும் ஒரு தனிநாடாய் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது பேராச்சரியமே.

Sources: ABC News / Wikipedia
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...