Pages

Saturday, March 4, 2017

அதிரையில் சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாடு சிறப்பு ஆலோசனைக்கூட்டம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-4
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி
சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாடு சிறப்பு ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அக்கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் பிஎஸ் ஹமீது, செயலாளர் ஜெய்னூல் ஆபிதீன், வழக்கறிஞர் முனாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநிலத்துணைத் தலைவர் எஸ்.எஸ் நசுருதீன் கலந்துகொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 70 வது ஆண்டு நிறுவன நாளையொட்டி வரும் மார்ச் 11ந் தேதி திருநெல்வேலியில் பொருட்காட்சி மைதானத்தில் நடைபெறும் சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாடு - வரலாற்று கண்காட்சி குறித்து விளக்கி கூறினார். பின்னர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் - உறுப்பினர்கள் தகவல்
பரிமாற்றம் மற்றும் ஆலோசிக்க புதிதாக வாட்ஸ்அப் குழுமத்தை தொடங்கிவைத்தார்.

முன்னதாக அக்கட்சியின் அதிரை பேரூர் செயலர் சேக் அப்துல்லா வரவேற்றார். முடிவில் மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் சாகுல்ஹமீது நன்றி கூறினார். இக்கூட்டத்தில் ஜமால் முகம்மது, அபூபக்கர் உட்பட
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...