Pages

Thursday, March 9, 2017

உலக மகளிர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் !

தஞ்சாவூர் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தொடங்கி வைத்தார்.

உலக மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சித தலைவர் தெரிவித்ததாவது:
உலக மகளிர் தினம் அமெரிக்காவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஊதியத்தில் ஏற்பட்ட வித்தியாசத்தை போக்குவதற்காக பெண்களின் உரிமைக்காக பேரணி நடத்தியதன் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் சம உரிமை பெற்று வருகின்றனர்.  ஆண்களுக்கு நிகரான அனைத்து பணிகளையும் பெண்கள் செய்து வருகின்றனர்.  ஆண்களுக்கு நிகரான ஊதியம் பெறுகின்றனர்.  அனைத்து துறைகளில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கென சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பெண்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, உள்ளாட்சிகளில், இட ஒதுக்கீடு, பட்டப்படிப்பு படித்த மகளிருக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.50,000 நிதியுதவி, பள்ளி கல்வி முடித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ரூ.25,000 நிதயுதவி, கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவைகள் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தற்பொழுது உத்தரவிட்டுள்ளது. வேலை செல்லும் பெண்களுக்கு 50சதவிகித மானியத்தில் இரு சக்கர வாகனம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.12,000 இருந்த உதவித்தொகை ரூ.18,000மாக உயர்த்தி அறிவித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் 70 சதவிகித பெண்கள் கல்வி அறிவு பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகமான மாணவிகளை தேர்ச்சி பெறுகின்றனர்.   ஒரு வீட்டில் பெண் கல்வி பெற்றிருந்தால், அந்த குடும்பத்தில் அனைத்துவிதமான நன்மைகளும் தானாக வந்து சேரும். கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் அதிக சேமிக்கும் பழக்கம் இருக்கும். பெண்களால் சிறந்த முறையில் நிர்வாகம் செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாக இந்திய அளவில் நமது முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரும், தமிழகத்தில் முன்னாள் மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களை உதாரணமாக கூறலாம்.

பெண்கள் அரசு வழங்கும் திட்டங்கள் தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருந்து அனைத்து திட்டங்களை பெற்று பயன் அடைய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இவ்விழாவில் சிறந்த முறையில் மருத்துவ சேவை புரிந்தமைக்காக டாக்டர் ராணி, டாக்டர் கௌசல்யா, டாக்டர் செல்வி, டாக்டர் தமிழ் கமல்மதி, டாக்டர் நிர்மலா ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கௌரவித்தார்கள்.

மகளிர் தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் துணைவியார் அ.ராஜசெல்வி,  சமூக நலத்துறை அலுவலர் பாக்கியலெட்சுமி, தமிழக பெண்கள் கூட்டமைப்பு செயலாளர் சாந்தி, வழக்கறிஞர் ரேவதி ராஜ், மெர்சிடிஸ் கர்வஜால், பெட்ரிஷியா மெமோலி சமூக ஆர்வலர் டோமினிக் சேகர், தஞ்சாவூர் குடும்ப ஆலோசனை மைய உறுப்பினர்கள் டி.எம்.எஸ்.எஸ்.எஸ். உறுப்பினர்கள், தமிழக பெண்கள் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக பெண்கள் கூட்டமைப்பு தலைவி ஏ.செபஸ்டி அவர்கள் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...