Pages

Tuesday, March 14, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் முத்தமிழ் விழா ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ் முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை சார்பில் முத்தமிழ் விழா செவ்வாய்க்கிழமை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ. எம் உதுமான் முகையதீன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி அரசு கலைக்கல்லூரி தமிழ் உயராய்வு மையம், பேராசிரியர் மா. சிதம்பரம் கலந்துகொண்டு பேசுகையில்; 'நம்முடைய அடையாளம் நாம் பேசும் மொழி. தமிழ்மொழியை உயிராக நேசியுங்கள். ரசனையோடு வாழவேண்டும் என்பதை தமிழ் இலக்கியங்கள் நமக்கு கற்றுத்தருகின்றன. வாழ்வின் நெறிமுறைகளைக் கற்றுக்கொள்ள தமிழைப் படியுங்கள். வணிகநோக்கத்திற்காக பிற மொழிகளை கற்பதில் தவறில்லை. உலகத்தில் முதன்முதலில் எழுத்தோடு பண்பாட்டையும் அறிமுகப்படுத்திய ஒரே இனம் தமிழ்இனம்' என்றார்.

விழாவில் தமிழ் இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டிகளில் முறையே முதல் இடங்களை பெற்ற திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர் த.க தமிழ் பாரதன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி சா.ச. பிருந்தா ஆகியோருக்கு தலா ரூ.1500 ரொக்கப்பரிசு, சுழற்கோப்பை, பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, பாரதிதாசன் கவிதை ஒப்புவித்தல் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி ஆகியவற்றில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப்பரிசுகள், பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக தமிழ்த்துறை தலைவர் அ. கலீல் ரஹ்மான் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே. நீலகண்டன் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் பேராசிரியை எஸ். சாபிரா பேகம் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப்பணியாளர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...