Pages

Wednesday, March 8, 2017

சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார் !

தஞ்சாவூர் மாவட்டம், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியும், ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் கிங்ஸ் இணைந்து சோமநாத குளத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் சீமை கருவேல மரம் அகற்றும் பணியை இன்று (08.03.2017) தொடங்கி வைத்தனர்.

பூமிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் சீமைக் கருவேல மரங்கள், நிலத்தடி நீரை பெருமளவு உறிஞ்சி விடுவதால் நீர்வளம் பாதிக்கப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதையும் ஆக்கிரமித்து விட்ட இக்கருவேல மரத்தை அகற்ற வேண்டும் என்ற அர்த்தமுள்ள நோக்கில் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து பான் செக்கர்ஸ் கல்லூரி எடுத்த இச்சிறப்பு முயற்சியில் ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் கிங்ஸ் ‘நாம்’ பெண்கள் அமைப்பு ஆகியவையும் இணைந்து சீமை கருவேல மரம் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் சீமை கருவேல மரம் அகற்றும் பணியை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் சீமை கருவேல மரத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கல்லூரி மாணவ மாணவியர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். மாண்புமிகு மதுரை உயர்நீதி மன்ற உத்தரவின்படி சீமை கருவேல மரத்தை வேரோடு அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சீமை கருவேல மரங்களை அகற்றியும் வருகிறது.  இன்று பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியும், ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவ10ர் கிங்ஸ் இணைந்து 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் சோமநாதன்குளத்தில் சீமை கருவேல் மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

இதே போன்று அனைத்து கல்லூரி மாணவ மாணவியர்களும் தங்கள் பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு முன்வர வேண்டும்.  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, சீமை கருவேல மரம் அகற்றுவதில் முன்னோடியாக உள்ளது.  இதே போன்று அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களின் பங்களிப்பு பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் தெரிவித்தார்.

சீமை கருவேல மரம் அகற்றும் தொடக்க நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் த.சுரேஷ்,  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் விக்டோரியா, செயலாளர் அன்னை முனைவர் மரியம்மாள், வட்டாட்சியர் ஆர்.குருமூர்த்தி, நாம் பெண்கள் அமைப்பின் நிறுவனர் உஷாநந்தினி, இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம், பான் செக்கர்ஸ் மாணவர் மன்ற தலைவர் செல்வி சரிகா, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியின் அறிவியல் துறையினர், கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், சுற்றுச்சுழல் அமைப்பு போன்ற கல்லூரியில் இயங்கி வரும் பல்வேறு அமைப்புகளின் துணையோடு பேராசிரியர்கள், மாணவிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...