Pages

Friday, March 3, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏரியல் கணிதம் பயிற்சி !

அதிராம்பட்டினம், மார்ச்-03
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில்
ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி 9 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஏரியல் கணிதம் பயிற்சி வகுப்பு இன்று (03-03-2017) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகையில்;
மாணவர்கள் அனைத்து பாடங்களையும் செயல்வழிக் கற்றல் மூலம் செய்து கற்பதன் மூலம் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ள இயலும். அதனால் அவர்கள் எதிர்காலத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் பயில தேவையான போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களுக்கு எளிதில் பதிலளிக்க முடியும்' என்றார்.

கல்லூரி பேராசிரியர்கள் ஓ.சாதிக், கே. சுந்தர் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி அளித்தனர். இதில் ஏரியல் கணிதம் செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு, கல்லூரியில் இயங்கி வரும் நூலகங்களில் உள்ள புத்தகங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி விளக்கப்பட்டது. கல்லூரி விலங்கியல் துறையில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்று அங்குள்ள பதப்படுத்தப்பட்டுள்ள உயிரினங்களை பார்வையிட்டு அது சார்ந்த தகவல்களை கேட்டறிந்து பயன்பெற்றனர். மேலும் மனித இரத்த வகை கண்டறியப்பட்டு இது பற்றி விளக்கப்பட்டது. வேதியியல் துறையில் உள்ள ஆய்வகங்களை பார்வையிட்டு அங்குள்ள ஆய்வக உபகரணங்கள் மற்றும் வேதிப் பொருட்கள் பற்றிய விபரங்களை கேட்டறிந்தனர்.

இந்த பயிற்சி முகாம் மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரிய ஆசிரியைகளுக்கும், மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவித்தனர். இப்பயிற்சி முகாமில் பள்ளி ஆசிரியர்கள் டி. சாந்தி ரோஸ்லீன், ஜி. சந்திரா, ஆர். ஜெய்சங்கர், எம். கமலவள்ளி, வி.சிவகாமி, ஏ.ஹில்டாமேரி, பி.ஜோஸ்பின் சிரியபுஷ்பம், எப். அருளப்பன்,கே.விமலாதேவி, டி.கெளரி மனோகரி, எஸ். மாரிமுத்து, ஏ. முஹம்மது ரபீக் உட்பட 9 ஆம் வகுப்பு 144 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...