Pages

Thursday, March 9, 2017

இந்தியாவில் தனியாருக்கு சொந்தமான நேரோகேஜ் ரயில் பாதை: ஓர் வரலாற்று பார்வை (படங்கள்)

அதிரை நியூஸ்: மார்ச்-9
இந்தியாவிலுள்ள அனைத்து ரயில்வே லைன்களும் ஆங்கிலேயர் காலத்தில் தனித்தனி ஆங்கில முதலாளிகளின் நிறுவனங்களுக்கு சொந்தமானவை, இவை அனைத்தையும் 'இந்தியன் ரயில்வேஸ்' என்ற ஒரே குடையின் கீழ் 1952 ஆம் ஆண்டு இந்திய அரசு தேசியமயமாக்கியது ஆனாலும் ஒரே ஒரு ரயில்வே லைனைத் தவிர இது விடுபட்டதற்கான சரியான காரணம் யாருக்கும் தெரியவில்லை அதனால் இன்று வரை இந்த நேரோகேஜ் (Narrow Gauge) பாதை 1910 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கில்லிக் & நிக்ஸன் (Killick & Nixon) என்ற பிரிட்டீஷ் நிறுவனத்திற்கே சொந்தமாக திகழ்கிறது.

யாவத்மால் (Yavatmal) - முர்திஜாபூர் (Mutijapur) வழியாக அச்சல்பூர் (Achalpur) சென்றடையும் 190 கி.மீ தூரமுள்ள இந்த ரயில்வே லைனில் 1923 ஆம் ஆண்டு முதல் இந்த மார்க்கத்தில் பயணிகள் ரயில்கள் ஓடத்துவங்கியது, அதற்கு முன் 1916 ஆம் ஆண்டு முதல் சரக்கு ரயில் பாதையாகவே இருந்தது.

மஹராஷ்டிரா மாநிலம் விதர்பாவிலும் அமராவதி மாவட்டங்களிலும் விளையும் பருத்திகளை முதலில் பம்பாய் நகருக்கும் பின்பு அங்கிருந்து கடல் மார்க்கமாக இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கும் ஏற்றி அனுப்பவே துவங்கப்பட்டது.

கில்லிக் & நிக்ஸன் நிறுவனம் பிரிட்டீஷ் அரசுடன் இணைந்து கூட்டுமுயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் ஆரம்பப் பெயர் கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே (Great Indian Peninsular Railway - GIPR) என்பதாகும். இந்த ரயிலுக்குப் பெயர் சகுந்தலா எக்ஸ்பிரஸ், இந்த ரயில்வே லைனுக்கு தற்போதைய பெயர் சகுந்தலா ரயில்வேஸ் என்று மக்கள் அழைத்துவரும் நிலையில் சென்ட்ரல் புரோவின்ஸ் ரயில்வே கம்பெனி (Central Province Railway Company - CPRC) என்ற பெயரிலேயே இன்று வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

 நாளொன்று ஒரு முறையே ஆடிஅசைந்து போய்த்திரும்பும் இந்த ரயில் ஏழைகளின் வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல, வெறும் 25 ரூபாய் தான் கட்டணம் ஆனால் இதே தூரத்தை பேருந்தில் கடக்க 150 ரூபாய் செலுத்த வேண்டும்.

மான்செஸ்டரில் தயாரிக்கப்பட்ட ZD Model நீராவி எஞ்சின் மூலம் இயங்கிவந்த இந்த ரயிலை 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் மாற்றிவிட்டு டீசல் எஞ்சினை பொருத்தினார்கள், அதாவது 70 ஆண்டுகளுக்கு அலுக்காமல் உழைத்துள்ளது. மேலும், ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய்க்கு மேல் ராயல்டியையும் பிரிட்டீஷ் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது இந்தியன் ரயில்வேஸ்.

இன்று வரை 7 ஊழியர்கள் பழங்கால முறைப்படியே கைகளால் சிக்னல்களை இயக்குவது, டிக்கெட் கொடுப்பது என வழமையான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போதுள்ள மத்திய ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அவர்கள், இந்த நேரோகேஜ் பாதையை அகற்றிவிட்டு பிராட்கேஜ் பாதையாக மாற்ற 1500 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

ஒரு புரிதலுக்காக...
நமதூரில் ( தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ) போடப்பட்டிருந்த ரயில்வே பாதையின் பெயர் மீட்டர்கேஜ் என்பதாகும். இந்த நேரோகேஜ் பாதை என்பது அதைவிட சற்று குறுகியதாகும்.

தமிழில்: நம்ம ஊரான்
Sources: http://www.thebetterindia.com & http://www.storypick.com
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...