Pages

Wednesday, March 8, 2017

அதிரை பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக உணவகம் திறப்பு !

அதிராம்பட்டினம், மார்ச்-8
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வணிக வளாக கட்டிடத்தில் புதியதோர் உதயமாக 'உதயா உணவகம்' என்ற பெயரில்
உணவகம் இன்று புதன்கிழமை காலை தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.எச் அஸ்லம், அதிமுக சிறுபான்மை நலப்பிரிவு மாவட்டச் செயலர் அதிரை அப்துல் அஜீஸ், சமூக ஆர்வலர் மாணிக்க முத்துசாமி உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள் பலர் உணவகத்திற்கு வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் இராமநாதன் கூறுகையில்...
அதிரை பேருந்து நிலைய வணிக கட்டிட வளாகத்தில் பயணிகள் வசதிக்காக காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவில் புரோட்டோ, சப்பாத்தி உள்ளிட்டவை சுடச்சுட தயார் செய்து வழங்க உள்ளோம். அதிரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள், பயணிகள் எங்கள் உணவகத்திற்கு தொடர்ந்து வருகைதந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
 
 
  


 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...