Pages

Saturday, March 11, 2017

அதிரையில் தமுமுக - மமக பொதுக்குழுக் கூட்டம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-7
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் அதிரையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு அதிரை பேரூர் தமுமுக/மமக தலைவர் எஸ்.எம் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். தமுமுக மாவட்டச் செயலர் அதிரை அகமது ஹாஜா, பொருளாளர் செய்யது முகமது புஹாரி, தமுமுக/மமக அல் அய்ன் மண்டல பொருளாளர் அப்துல் ரஹ்மான், இஸ்லாமிய பிரசாரப் பேரவை மாவட்டச் செயலர் டாக்டர் உமர், மமக மாவட்ட துணைச் செயலர் மதுக்கூர் ஜபருல்லா, பட்டுக்கோட்டை சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் எதிர்வரும் ( 18-032017 ) அன்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடத்த உள்ளது. இதில் திரளானோரை பங்கேற்க செய்வது,
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 21 வார்டுகள் வரை உள்ள விடுபட்ட பகுதிகளுக்கு புதிய கிளைகள் அமைப்பது, தற்போது உள்ள கிளைகளின் பொறுப்பாளர்களை தீவிரமாக சமூகப்பணியாற்ற முடுக்கி விடுவது, அதிரை பேரூர் பகுதியில் புதிதாக தொழிற்சங்கம் மற்றும் வர்த்தக அணி அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை மவ்லவி. ஹீசைன் மன்பயீ கலந்துகொண்டு இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.

தொடக்கத்தில் மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது
வரவேற்று பேசினார். முடிவில் தமுமுக அதிரை பேரூர் செயலர் கமாலுத்தீன்
நன்றி கூறினார். இக்கூட்டத்தில் தமுமுக / மமக பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...