Pages

Wednesday, March 8, 2017

SSLC தேர்வு தொடக்கம்: தஞ்சை மாவட்டத்தில் 35,470 மாணவ, மாணவியர் பங்கேற்பு !

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (08.03.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

ஒரத்தநாடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை  10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு கால அட்டவணை அறிவித்துள்ளது. அதன்படி இன்று 8.03.2017 முதல் நாள் அரசு பொதுத் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது.  இன்றிலிருந்து 30.03.2017 வரை தேர்வு நடைபெறவுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் 113 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடைபெறுகிறது.  இத்தேர்வில் 16,835 மாணவர்களும், 17,642 மாணவியர்களும் மொத்தம் 34,477 பள்ளி மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

3 தனித்தேர்வு மையங்களில் 596 மாணவர்களும், 397 மாணவியர்களும் மொத்தம் 993 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.  ஆக மொத்தம் கூடுதலாக 35,470 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இத்தேர்வு நடைபெறும் மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்கள் துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 2,640 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் 130 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறுவதை கண்காணிக்க பள்ளிக் கல்வி துறையில் பணிபுரியும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு 173 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சாரம், போக்குவரத்து பேருந்து வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது,  போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார். ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுலவர் திருவளர்செல்வி உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...