Pages

Thursday, April 6, 2017

ரூ.1000 கோடி மதிப்பீட்டில் 'ஸ்மார்ட் சிட்டி' நகரமாகும் தஞ்சாவூர் !

தஞ்சாவூர் மாவட்டம் சீர்மிகு நகரம் ( Smart City ) அமைப்பது தொடர்பாக மாநகராட்சிப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை அவர்கள் செய்தியாளர்களிடம்  தெரிவித்ததாவது;  
தஞ்சாவூர் மாநகராட்சி சீர்மிகு Smart City ஆக மாற்றப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்வது குறித்து மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, இந்துசமய அறநிலையத் துறை, சுற்றுலாத் துறை ஆகிய துறை அலுவலர்களுடன் இன்று ( 06.04.2017 ) நேரில் ஆய்வு செய்யப்பட்டது.

பழைய பேருந்து நிலையம், அரண்மனை வீதி, கிழக்கு வாசல், ராஜகோரி, வடக்கு வாசல், கரந்தை ஆகிய பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டது.  தஞ்சாவூர் மாநகராட்சி சீர்மிகு நகரமாக மாற்றுவதற்கு முதல் கட்டமாக ரூ. 200 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது என தகவல் வரப்பெற்றள்ளது.  

இந்தப் பணி 5 ஆண்டுகளில் நிறைவு செய்யப்பட உள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் ரூ. 200 கோடி என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளில் ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  தஞ்சாவூர் பாரம்பரியமிக்க பிரதான நகரமாகும்.  சுமார் 100 ஆண்டுகள் 150 ஆண்டுகள் முன்னதாக கட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டடங்கள், அதனுடைய அழகு மற்றும் தோற்றம் மாறாமல் சீர் செய்து அழகுபடுத்துவதும் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பூங்காக்கள், சாலைகள், தெருக்கள், நவீனமாக சீர்ப்படுத்தப்பட உள்ளது. Smart City சீர்மிகு நகரம் தஞ்சாவூர் கிடைக்கப் பெற்றது இதன் மூலம் பல்வேறு  வளர்ச்சிப்  பணிகள்  மேற்கொள்ளப்பட  உள்ளன.   இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை  துணை ஆணையர் குமரதுரை, பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜபான்ஸ்லே, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சரவண செல்வன், மாநகராட்சி உதவி செயற் பொறியாளர் ராஜசேகரன், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் டி. சதீக்ஷகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...