Pages

Thursday, April 6, 2017

அதிரை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது!

அதிராம்பட்டினம், ஏப்-06
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கிராமத்திலுள்ள சவுக்குத் தோப்பில் இரவு நேரத்தில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள்கூடி பெரியளவில் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பட்டுக்கோட்டை ஏஎஸ்பி அரவிந்த் மேனன் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு அங்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சூதாட்ட களத்திலிருந்து ரூ. 3 லட்சம் ரொக்கம், பிரமுகர்கள் வந்திருந்த 1 கார், 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சூதாட்ட கிளப் நடத்தியதாகக் கூறப்படும் முருகேசன், செந்தமிழ் ஆகிய 2 பேரும் தப்பிவிட்டனராம். அவர்களை அதிராம்பட்டினம் போலீஸார் தேடி வருகின்றனர்.

நன்றி: தினமணி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...