Pages

Sunday, April 16, 2017

தெலுங்கானாவில் முஸ்லீம் இடஒதுக்கீடு 12 சதவீதமாக உயர்வு !

அதிரை நியூஸ்: ஏப்-16
தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு வாக்குறுதி வழங்கியதைப் போல் தெலுங்கானாவில் கணிசமாக வாழும் முஸ்லீம்கள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டு அளவை உயர்த்தி வழங்கியுள்ளது.

மாநில அரசு அமைத்த மாநில பிற்படுத்தப்பட்டோருக்கான கமிஷனும், செல்லப்பா அவர்கள் தலைமையிலான கமிஷனும் கள ஆய்வு செய்து வழங்கிய பரிந்துரையின் அடிப்படையிலேயே இருசாராருக்கும் இந்த உயர்வை நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் விவாதித்து ஓப்புதல் வழங்கினார்.

இந்த புதிய உத்தரவின்படி முஸ்லீம்களின் இடஒதுக்கீடு 12 சதவிகிதமாகவும், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 10 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. முஸ்லீம்களுக்கு ஏற்கனவே 4 சதவிகித இடஒதுக்கீடு பல்வேறு குறுக்கீடுகளுக்கு மத்தியிலும் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவின்படி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டத்தை எதிர்ப்போம் என மனிதகுல விரோத பாஜக அறிவித்துள்ளது. 119 உறுப்பினர்களை உடைய சட்டமன்றத்தில் 5 பிஜேபி உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சட்ட மசோதவை காங்கிரஸ், தெலுங்கு தேசம், 7 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள முஸ்லீம் மஜ்லீஸ் கட்சி ஆகியவை வரவேற்கும் என்பதால் தெலுங்கானா சட்டமன்றத்தில் மசோதா நிறைவேறுவதில் எத்தகைய இடர்பாடுகளும் இருக்காது. அதேவேளை மத்திய அரசும், நீதிமன்றங்களும் தலையிடும் என்றாலும் சட்டத்திற்கு தேவையான ஒப்புதல்களை பெற போராடுவோம் என்றும் தெலுங்கானா முதல்வர் தெரிவித்தார்.

வழமைபோல் எதிர்க்கும் வெங்காய நாயுடுக்கள் இந்த இடஒதுக்கீட்டை வழங்கினால் தெலுங்கானா பாகிஸ்தானாகிவிடும் என்று திருவாய் மலர்ந்துள்ளார். இந்த இடஓதுக்கீட்டின் பலனாக சில முஸ்லீம்கள் அரசு வேலைவாய்ப்பை பெறுவார்கள் அவ்வளவு தான். இதனால் தெலுங்கானா பாகிஸ்தான் ஆகும் என ஒப்பாரி வைக்கும் இவர்கள் தான் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், இந்திய கார்ப்பரேட்டுகளுக்கும் அடிமைச் சேவகம் செய்து வரும் மெய்யான தேசவிரோதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...